SAvAFG : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா! போட்டியில் வெற்றி பெறுமா ஆப்கானிஸ்தான்?
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவன் பற்றிய விவரங்களை கீழே பாருங்கள்.

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானின் கராச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில், ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க உள்ளது.
இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் மட்டுமே விளையாடி உள்ளது. இப்போது, இந்தப் போட்டியின் தனது முத்திரையைப் பதிக்க காத்திருக்கிறது. இதுவரை ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 5 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன.
இதில், ஆப்கானிஸ்தான் 2 முறை வென்றுள்ளது. தென்னாப்பிரிக்கா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கராச்சி மைதானத்தை பொறுத்தவரையில், இதுவரை இந்த மைதானத்தில் 78 ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 36 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், இலக்கைத் துரத்தும் அணி 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஷார்ஜாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது. தற்பொழுது, டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், முதலில் பந்து வீச வரும் ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தக்கவைக்குமா என்று பார்க்கலாம்.
இரு அணிகள் சார்பாக விளையாட விருக்கும் வீர்களின் பட்டியல்…
ஆப்கானிஸ்தான் அணி
கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான அணியில், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, அஸ்மதுல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, ரஷீத் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நோர் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணி
கேப்டன் டெம்பா பவுமா தலைமையிலான அணியில், ரியான் ரிக்கல்டன, டோனி டி ஜோர்ஜி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025