பார் நல்லா பார்…மேஜிக் செய்த ஸ்டீவ் ஸ்மித்..ஷாக்கான வீரர்கள்!
ஆடம் ஜாம்பா, தன்வீர் சங்கா, மேக்ஸ்வெல் மற்றும் மேட் ஷார்ட் போன்ற வீரர்கள் இருப்பதால் எங்களுடைய அணியில் சுழற்பந்துவீச்சு பலமாக இருக்கும் என ஆஸ்ரேலியா கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

லாகூர் : ஐசிசி சம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கியுள்ள நிலையில், தொடரில் விளையாடும் அணிகள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆஸ்ரேலியா அணி வீரர்கள் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய முதல்போட்டியில் ஆஸ்ரேலியா இங்கிலாந்து அணியை வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி லாகூர் கடாஃபி மைதானத்தில் வைத்து எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.
எனவே, தீவிரமான பயிற்சியில் வீரர்கள் இருக்கும் நிலையில் வலைப்பயிற்சியின் போது சக வீரர்களை இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஸ்டீவ் ஸ்மித் மேஜிக் ஒன்றை செய்துள்ளார். பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது அவர் தன்னுடைய பேட்டை எடுத்துக்கொண்டு இப்போது பாருங்கள் என கூறி பேட்டை நடுநிலையாக நிறுத்தி வைத்தார்.
அந்த பேட்டும் காற்றில் ஆடி கீழே விழாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தது. இதனை பார்த்த அங்கிருந்த சக வீரர்கள் எப்படி பேட் நிற்கிறது என்பது போல சற்று ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், வீடியோ பார்த்த பலரும் பேட்டிங்கில் மட்டுமில்லை ஸ்மித் பேட்டிலும் மேஜிக் செய்வார் என கூறிவருகிறார்கள்.
மேலும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஸ்மித் அணி வீரர்கள் குறித்து சில விஷயங்களை பேசினார். இது குறித்து அவர் பேசியதாவது ” எங்களுடைய அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் தனித்தன்மையான திறன்களைக் கொண்டிருக்கிறார்கள். கேப்டனாக இது எனக்கு முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அவர்களுடன் சரியாக பேசிக்கொண்டு, தேவையான நேரத்தில் சரியான தேர்வுகளை எடுக்க உதவுகிறது.
ஆடம் ஜாம்பா, தன்வீர் சங்கா, மேக்ஸ்வெல் மற்றும் மேட் ஷார்ட் போன்ற வீரர்கள் இருப்பதால் சுழற்பந்துவீச்சுக்கு பக்கபலமாக இருக்கும் என நினைக்கிறேன். இதில் ஒவ்வொருவரும் தனி தனி திறமைகளை வைத்திருப்பவர்கள். பந்தை சுழற்ற கூடிய திறமை விக்கெட் எடுக்க கூடிய திறமை என தனி தனியாக ஒருவருக்கு ஒரு திறமை இருக்கிறது. இப்போது நாங்கள் ஒரே அணியில் இருப்பது பலமாகவும் இருக்கும் என நினைக்கிறேன்” எனவும் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025