கேரள வெள்ளம் …!ரூ.1,13,20,000 நிவாரண நிதியாக முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கப்பட்டது …!

Default Image

கேரள வெள்ள நிவாரணத்திற்கு, அதிமுக எம்எல்ஏ-க்களின் ஒரு மாத சம்பளம் முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர்.

அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின்  அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது.

இந்நிலையில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு, அதிமுக எம்எல்ஏ-க்களின் ஒரு மாத சம்பளத்தின் மொத்த தொகையான ரூ.1,13,20,000-க்கான வரைவோலையை முதலமைச்சர் பழனிசாமியிடம், சபாநாயகர் தனபால் வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்