அட்ராசக்கை.! 30,000 ரூபாய் அதிரடி தள்ளுபடி! எப்போது வரை தெரியுமா? காவஸாக்கி நிஞ்ஜா 300 அட்டகாச ஆஃபர்!
காவஸாகி நிஞ்ஜா 300 ரக பைக்கிறகு அந்நிறுவனம் அறிவித்த ரூ.30 ஆயிரம் தள்ளுபடி இம்மாத இறுதி வரை தொடரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி : இந்திய இருசக்கர வாகன மோட்டார் சந்தையில் யமஹா R3, KTM 390 RC, டிவிஎஸ் அப்பாச்சி RR310, அப்ரில்லா RS 457 ஆகிய மாடல்களுக்கு சக போட்டியாளராக கருதப்படுகிறது ஜப்பானிய நிறுவனம் காவஸாகியின் நிஞ்ஜா 300 பைக் . இதன் விலை இந்தியாவில் ரூ.3.43 லட்சம் (எக்ஸ் ஷோ ரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
என்னதான் ரூ.3.43 லட்சம் என விலை இருந்தாலும், இதன் அப்டேட் போதவில்லை என்கிறார்கள் வாகன பிரியர்கள். அதிலும் குறிப்பாக இன்னும் அதே பழைய மாடல் வடிவமைப்பில், பாதி டிஜிட்டல் வடிவில் தான் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் உள்ளது. பழைய ஸ்போர்ட்ஸ் கிளாசிக் மாடல் எனக் கூறினாலும் கிளாசிக் ரக பைக்குகளே தற்போது முழுக்க டிஜிட்டல் பக்கம் அப்டேட்டாகி வருகின்றன.
அதிலும், பலம் வாய்ந்த சக போட்டியாளரான யமஹா R3 மற்றும் MT-03 ஆகியவை சக வாகனங்களில் ரூ. 1.10 லட்சம் வரை விலை குறைப்பை அறிவித்தது யமஹா நிறுவனம். யமஹா R3 இந்திய சந்தைகளில் ரூ. 3.59 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் விலை) தொடங்கி, ஐகான் ப்ளூ மற்றும் யமஹா பிளாக் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது.
ரூ.30 ஆயிரம் தள்ளுபடி :
இப்படியான சூழலில் தான் ரூ.3.43 லட்சம் எக்ஸ் ஷோ ரூம் விலை கொண்ட கவஸாகியின் நிஞ்ஜா 300 ரக பைக்கில் ரூ. 30 ஆயிரம் வரையில் தள்ளுபடியை அறிவித்து இருந்தது. இதனை அடுத்து, இன்னும் விற்பனையை முதன்மை நோக்கமாக கொண்டு வரும் பிப்ரவரி 28ஆம் தேதி (இம்மாத இறுதி) வரையில் இந்த ஆஃபர் இருக்கும் என காவஸாகி நிறுவனம் அறிவித்துள்ளது.
காவாஸாகி நிஞ்ஜா 300 கடந்த 10 ஆண்டுகளாக அதன் வடிவமைப்பை மாற்றாமல் உள்ளது. பழைய ஸ்போர்ட்ஸ் கிளாசிக் ஸ்டைலில் ஸ்போர்ட்டியாக தோற்றமளித்தாலும், கவாசாகி தனது தோற்றத்தில் மேம்படுத்த வேண்டிய நேரமிது என்கிறார்கள் வாகன பிரியர்கள். அதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் பழமையானதாக உள்ளது. அது இன்னும் அரை-டிஜிட்டல் அமைப்பைக் கொண்டதாகவே உள்ளது.
நிஞ்ஜா 300 பற்றி..,
கவாசாகி நிஞ்ஜா 300 ரக பைக்கில் 296சிசி, பேரலல்-ட்வின், லிக்விட்-கூல்டு எஞ்சின் உள்ளது. இது 38.88bhp மற்றும் 26.1Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இது 6 கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பைக்கின் வன்பொருளில் டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் ஆகியவை உள்ளது. அதன் பிரேக்கிங் 17-இன்ச் அலாய் வீல்களில் பொருத்தப்பட்ட முன் மற்றும் பின்புற டிஸ்க் கொண்டுள்ளது. இந்த அமைப்பு இரட்டை-சேனல் ABS-ஐ கொண்டுள்ளது. கவாசாகி நிஞ்ஜா 300ஆனது, இந்தியாவில் 3 வண்ணங்களில் வழங்குகிறது. லைம் கிரீன், கேண்டி லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் மூண்டஸ்ட் கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.