நாதாண்டா மாஸ்… சாம்பியன்ஸ் டிராஃபிக்கு பாரம்பரிய டச் கொடுத்த கேன் மாமா.! வேட்டியில் வைரல் வீடியோ…
அவர் வெள்ளை வேட்டி மற்றும் செருப்பு கூட அணிந்து வெளியே செல்லும் வீடியோ சமூக தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.

பாகிஸ்தான் : பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு நியூசிலாந்து அணி தயாராகி வருகிறது. அன்றைய தினம் அந்த போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணிக்கும் எதிராக முதல் போட்டியடன் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குகிறது.
இந்த நிலையில், நியூசிலாந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனின் செயல்கள் இந்த போட்டி மீதான கவனத்தை ஈத்துள்ளது. அதாவது, நியூசிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம் கேன் வில்லியம்சன் கடந்த (பிப்ரவரி 15) சனிக்கிழமை கராச்சியில் உள்ள ஒரு வளாகத்தில் இருந்து அவர் வெள்ளை வேட்டி மற்றும் செருப்பு கூட அணிந்து வெளியே செல்லும் வீடியோ சமூக தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.
Kane Williamson in dhoti (Lungi). pic.twitter.com/bYdHLsSbVF
— Nawaz 🇵🇰 (@Rnawaz31888) February 15, 2025
இந்திய பாரம்பரிய உடையை அணிய அவர் தேர்ந்தெடுத்தது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, இது உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கு மத்தியில் நியூசிலாந்து அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக, வில்லியம்சன் மீது ரசிகர்கள் மற்றும் அவரது சக வீரர்கள் இருவரின் எதிர்பார்ப்புகளும் நிறைந்துள்ளன.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாகவே வில்லியம்சன் வலுவான ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் லாகூரில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான் போட்டியில் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் எடுத்தார். இதுவறை அவர் விளையாடிய 160 ஒருநாள் போட்டிகளில் (ஒருநாள்) மொத்தம் 7,035 ரன்கள் குவித்துள்ளார், சராசரியாக 49.54 மற்றும் 14 சதங்களை அடித்துள்ளார். அதிலும், பாகிஸ்தானுக்கு எதிராக 24 போட்டிகளில் 1290 ரன்கள் குவித்த வில்லியம்சன், 56 என்ற சராசரியைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.