இதை அவரு கேட்டாருன்னா ஷாக் ஆகிடுவாரு… தவளைக்கு ‘டைட்டானிக்’ நடிகர் பெயரை சூட்டிய ஆராய்ச்சியாளர்கள்.!
சுற்றுச்சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது பற்றி அடிக்கடி பேசும் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் நினைவாக, தவளைக்கு ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய் என்று பெயரிடப்பட்டது.

தென் அமெரிக்கா : ஈக்வடாரில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவளை இனத்திற்கு டைட்டானிக் பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரிடப்பட்டுள்ளது. அழிந்து வரும் விலங்குகளைப் பாதுகாப்பதில் லியோனார்டோ டிகாப்ரியோ தனது ஆதரவைக் காட்டி வருவது வழக்கம்.
இந்த நிலையில், சுற்றுச்சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது பற்றி அடிக்கடி பேசும் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் நினைவாக, தவளைக்கு “ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோ” என்று பெயரிடப்பட்டது. தி டெலிகிராஃப் இதழ் கூற்றுப்படி, புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான வனப்பகுதியில் காணப்படுகின்றன.
இந்த தவளையானது மற்ற உயிரினங்களைப் போலல்லாமல், இது உடலில் கருமையான புள்ளிகள் மற்றும் தனித்துவமான விரல் வடிவம் போன்ற தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஈக்வடார் தேசிய பல்லுயிர் நிறுவனம், ஈக்வடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம் (USFQ) உள்ளிட்ட பல ஈக்வடார் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள், ஆறு புதிய இனங்களுடன் சேர்ந்து இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டனர்.
இதேபோல், கடந்த ஆண்டு அக்டோபரில், இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்திற்கும் டிகாப்ரியோவின் பெயரிடப்பட்டது. ‘அங்குகுலஸ் டிகாப்ரியோய்’ என்று பெயரிடப்பட்ட இந்த பாம்பு இனம் மத்திய நேபாளத்திலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்திற்கு இடையில் காணப்படுகிறது.