“தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்துகிறது. இதுதான் லட்சணமா?” அண்ணாமலை பரபரப்பு வீடியோ!

தமிழகத்தில் தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்தி வருகிறது. அவர்கள் வீட்டு பிள்ளைகள் 3 மொழி கற்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TN CM MK Stalin - BJP state president Annamalai (1)

சென்னை : தேசிய கல்வி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழக அரசியலில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேசிய கல்விக்கொள்கையில் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் தவிர்த்து 3வது மொழி படிக்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. அந்த 3வது மொழி ஹிந்தி மொழியாக இருக்க மத்திய அரசு, தொடர்ந்து இந்தி மொழியை மறைமுகமாக திணிக்கிறது என தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

தேசிய கல்வி கொள்கை விஷயத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது. அதனால் தான் தமிழகத்திற்கு தரப்பட வேண்டிய நிதியை கொடுக்க சட்டரீதியில் முடிவதில்லை என மத்திய கல்வி அமைச்சர் கூறிய கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆளும் திமுக அரசு மீது கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்.

காங்கிரஸ் குளறுபடி :

அந்த வீடியோவில் அண்ணாமலை பேசுகையில், ” நான் சில உண்மைகளை சொல்கிறேன். நான் ஒரு சாதாரண விவசாயி மகன். 1965-ல் அப்போதைய காங்கிரஸ் குளறுபடி செய்தது. ஹிந்தி மொழியை திணித்து அப்போதைய மத்திய அரசு காங்கிரஸ் தமிழ்நாட்டில் பெரும் பிரச்சனை செய்தது. அப்போது இருந்தே தேசிய கட்சி என்றால் தமிழ்நாட்டில் ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.

இந்தி கட்டாயம் :

மத்திய பாஜக அரசு 2019-ல் 2020 தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்தது. அந்த குழு பிரதமர்  மோடியிடம், இந்தியாவில் எல்லோரும் 3 மொழி படிக்க வேண்டும் என வலியுறுத்தியது.  தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து கட்டாயம் ஹிந்தி படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 2019 மே மாதம் கேபினெட் கூட்டத்தில் இது ஏற்புடையது அல்ல பிரதமர் மோடி முடிவு செய்தார். 1968 , 1986இல் ஹிந்தி மொழி குறித்து எல்லா இடத்திலும் இதே பிரச்சனை  எழுந்தது என்பதை பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஜூன் 3 2019-ல் கமிட்டி ரிப்போர்ட்டை திருத்தி தமிழ் (தாய்மொழி), ஆங்கிலம் தவிர்த்து ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என பிரதமர் மோடி மாற்றினார். 3வது மொழியாக எதோ ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ளுங்கள்.

தமிழகத்தில்..,

தாய் மொழி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் பிரதமர் மோடி.  ஆனால் , திமுக இன்னும் 1965 பஞ்சங்கத்தையே கொண்டு வருகிறார்கள். ஹிந்தி மொழியை யார் திணித்தார்கள்? தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் 52 லட்சம் மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 56 லட்சம் மாணவர்களும் பயில்கின்றனர். அரசு பள்ளியை விட 4 லட்சம்  மாணவர்கள் தனியார் பள்ளியில் அதிகம் பயில்கின்ற்னர்.

30 லட்சம் மாணவர்கள் 3 மொழி படிக்கிறார்கள். தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் தமிழ் மொழிக்கு பதிலாக பிரெஞ்சு மொழி படிக்கிறார். அது தப்பில்லை. ஆனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் 3 மொழி படிக்க கூடாதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து, திமுக கவுன்சிலர் வரையில் உங்கள் பிள்ளைகள் மூன்று மொழி கற்கலாம். வெளிநாட்டு செல்லலாம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதலாம். ஆனால் மற்றவர்கள் இவங்களுக்கு போஸ்டர் ஓட்டணுமா?

திமுகவின் பிழைப்பு :

இங்கே 2 தரப்பட்ட மனிதர்களை திமுக உருவாக்கி வைத்துள்ளது. ஒருவன் மேல மேல போயிட்டு இருக்கான். இன்னொருவன் கிழே கிழே செல்கிறான். இரண்டு மொழி படித்து கூலிக்கு வேலை செய்யணுமா? தமிழகத்தில் தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்தி வருகிறது. இத்தனை ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் கல்வியில் எந்த லட்சணத்தில் வைத்துளீர்கள் என்று பார்த்தீர்களா? 2024-ல் acer அமைப்பு நடத்திய சர்வேயில் ஒரு தமிழ் பாராவை 2ஆம் வகுப்பு மாணவன் படிக்க முடியாமல் திணறுகிறான்.  87% மாணவர்களால் அதனை படிக்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் தான் கல்வி இருக்கிறது என திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DMK VS BJP LIVE
Pradeep Ranganathan
SAvAFG - 1st Innings
shankar ed
MNM leader Kamalhaasan
BJP State presisident Annamalai - GetOutStalin
Covid HKU5