கடந்த வாரம் சாரிடான் உள்ளிட்ட மருந்துகளுக்கு தடை …!இந்த வாரம் தடை நீக்கம் ….!உச்சநீதிமன்றம் அனுமதி
சாரிடான், டார்ட் வலி நிவாரணி, பிரிட்டான் உள்ளிட்ட மருந்து பொருட்களை விற்பனை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சாரிடான் போன்ற மருந்து, மாத்திரைகள், எப்.டி.சி. எனப்படும் பிக்சட் டோஸ் காம்பினேஷன் முறையில் தயாரிக்கப்படுகின்றது. அவற்றில், 2 அல்லது அதற்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள், குறிப்பிட்ட அளவில் இடம்பெற்றிருக்கும்.எனவே கடந்த 2016 ஆண்டு இத்தகைய எப்.டி.சி. மருந்துகள், வலிகளில் இருந்து உண்மையாக நிவாரணம் அளிப்பதில்லை என்றும், போலி மருத்துவர்கள் அவற்றை பரிந்துரைப்பதால் அவை பாதுகாப்பானவை அல்ல என்றும் 344 வகை எப்டிசி மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
அதை எதிர்த்து,பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் அந்த மருந்துப் பொருள்களின் தயாரிப்பு நிறுவனங்கள் வழக்குகள் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அறி்க்கை அளிக்க, மத்திய மருந்துப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு, கடந்த டிசம்பர் 2017-ல் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஆய்வறிக்கையின் அடிப்படையில், 16 மருந்துப் பொருட்களைத் தவிர்த்து மற்ற 328 மருந்துப் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அவை 1988-க்கு முன்பிருந்தே விற்பனை செய்யப்பட்டு வருவதால், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பொருத்தவரை, சாரிடான், பான்டெர்ம் பிளஸ் கிரீம், டேக்சிம் ஏஇசட்., நீரிழிவு நோய்க்கான குளுக்கோநார்ம் பிஜி உள்ளிட்ட 328 வகைகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலி நிவாரணிகள், சிரப்கள், தோல் சிகிச்சை மருந்துகளை இனி உற்பத்தி செய்யவோ, விற்கவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவ நிறுவனங்கள் தொடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.அதில் சாரிடான், டார்ட் வலி நிவாரணி, பிரிட்டான் உள்ளிட்ட மருந்து பொருட்களை விற்பனை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இதனால் இந்த பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது .ஆனால் கடந்த வாரம் தான் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.