சோலி முடிஞ்சு.. ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா பந்து.!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி, தீவிர பயிற்சிகளை துபாயில் முழு வீச்சில் தொடங்கியுள்ளது.

rishabh pant injury

துபாய் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வருவதால், ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி, பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய அணி துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

டெல்லியில் இருந்து இரு தினங்களுக்கு முன் அபுதாபி புறப்பட்ட இந்திய அணி, துபாயில் தரையிறங்கிய பிறகு ஓய்வை தவிர்த்துவிட்டு உடனடியாக பயிற்சியில் களமிறங்கியது. சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு எதையும் விட்டுவிடக்கூடாது என்ற இந்திய அணியின் ஆர்வத்தையும் நோக்கத்தையும் காட்டுகிறது.

இதனிடையே, பயிற்சியின்போது ரிஷப் பண்ட்டிற்கு கால் முட்டியில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா அடித்த ஷாட் ரிஷப் பந்த் முழங்காலில் பட்டதாக கூறப்படுகிறது. உடனே மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், மைதானத்திலேயே அவர் வலியால் துடித்ததைக் காண முடிந்தது. இன்னும் சில தினங்களில் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் உள்ளனர். இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்ற ராகுல், விருப்பமான தேர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான எந்தப் போட்டிகளிலும் பந்த் விளையாடவில்லை, இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் கே.எல். ராகுல் முக்கிய விக்கெட் கீப்பராக இருப்பார் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்