LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் முதல் மும்மொழி கொள்கை விவகாரம் வரை இன்றயை முக்கிய செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : தலைநகரான டெல்லியில் இன்று (பிப்ரவரி 17)-ஆம் தேதி அதிகாலை 5:36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0-ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை நேரமாக இருந்ததால், பெரும்பாலான மக்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். பின் திடீரென நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு தேவையான கல்வி நிதியை விடுவிக்காதது, மும்மொழிக்கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் நாளை (பிப்.18) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.