முக்கிய வீரர்கள் இல்லை இதை பண்ணுங்க! ஸ்மித்திற்கு அட்வைஸ் கொடுத்த ஆடம் கில்கிரிஸ்ட்!
ஸ்மித் தொடக்க வீரராக சம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளார்.

லாகூர் : சம்பியன்ஸ் டிராபி 2025 ஆண்டுக்கான கிரிக்கெட் தொடருக்கு அணிகள் தயாராகி வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியில்முக்கிய வீரர்கள் பலர் காயங்களால் பங்கேற்க முடியாதது சோகமான ஒரு விஷயமாக உள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட், மிட்செல் மார்ஷ், ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அணியில் டிராவிஸ் ஹெட் , மேத்த்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் மட்டுமே உள்ளனர். முக்கிய வீரர்கள் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பேற்க உள்ளார். கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு கேப்டன் சி செய்திருந்த நிலையில், அதன்பிறகு ஆஸ்ரேலியா அணியை ஒரு நாள் போட்டியில் வழிநடத்தவில்லை. இதனையடுத்து, தற்போது முக்கியமான போட்டியில் மீண்டும் கேப்டன் பொறுப்பேற்று அணியை வழிநடத்தவிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர், பேட்ஸ் மேன் ஆடம் கில்கிரிஸ்ட் அணியை எப்படி வழிநடத்தி செல்லவேண்டும் என முக்கிய அறிவுரையைஸ்டீவ் ஸ்மித்க்கு வழங்கியுள்ளார். தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” பதட்டமான சூழ்நிலைகள் வரும்போது ஸ்மித் அதனை பொறுமையாக கையாளவேண்டும். அணியில் முக்கிய வீரர்கள் இல்லை என்றாலும் இருக்கும் வீரர்களை வைத்து திறம்பட செயல்பட முயற்சி செய்யுங்கள்.
என்னைப்பொறுத்தவரை ஸ்மித் இந்த சம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடவேண்டும். ஹெடுடன் ஓப்பனராக களமிறங்கி விளையாடவேண்டும். ஸ்மித் ஓப்பனராக அதிக போட்டிகள் விளையாடவில்லை என்றாலும் அவர் ஹெடுடன் களமிறங்கினாள் இடது-வலது கம்பினேஷன் அமைக்க முடியும்.
ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடப்போவது என்பது புதிதான விஷயம் இல்லை. ஏனென்றால், பல டி 20 போட்டிகளில் அவர் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி சிறப்பாக செயல்பட்டதை பார்த்திருக்கிறோம். எனவே, என்னைப்பொறுத்தவரை நான் அவருக்கு கொடுக்கும் அட்வைஸ் இது தான்” எனவும் ஆடம் கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளார்.