எங்களுக்கு எதிரா இதை பண்ணுங்க! ரஷீத் கானுக்கு அட்வைஸ் கொடுத்த வாசிம் அக்ரம்!
2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் பற்றி ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் : கிரிக்கெட் ரசிகர்களுடைய கவனம் முழுவதும் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்த முறை பாகிஸ்தான், துபாய் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதால் போட்டி மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக எழுந்துள்ளது.
இந்த தொடரில் விளையாட ஒவ்வொரு அணிகளும் தயாராகி கொண்டு இருக்கும் சூழலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஒவ்வொரு அணியில் இருக்கும் சிறப்பான வீரர்களை பற்றி பெருமையாக பேசி பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் பற்றி பேசியுள்ளார்.
தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் “ரஷீத் கான் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருடைய விளையாட்டின் மூலம் தான் ஆப்கானிஸ்தானை உலகிற்கு அறிமுகம் ஆனது கூட என்று சொல்லலாம். உலகம் தரத்திற்கு ஆப்கானிஸ்தான் வளர்ச்சி அடைய அவருடைய விளையாட்டும் முக்கிய காரணம். அவர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் தான் அந்த அளவுக்கு ஆப்கானிஸ்தானுக்கு வரவேற்பு கிடைத்தது.
என்னைப்பொறுத்தவரை அவர் என்னை விட சிறந்த பந்துவீச்சாளர் என்று கூட சொல்வேன். அந்த அளவுக்கு அவருடைய விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நான் நினைக்கிறேன்” என வாசிம் அக்ரம் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து முக்கிய ஆலோசனை ஒன்றையும் கொடுத்தார்.
அது என்னவென்றால், “ரஷீத் கானுக்கு எனக்கு ஒரே ஒரு அறிவுரை மட்டுமே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னென்னா உங்கள் டெஸ்ட் அணியை மேம்படுத்தி, பாகிஸ்தானுக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்கள்.எங்களுக்கு எதிராக நீங்கள் விளையாடினாள் இன்னும் சிறப்பாக இருக்கும்” எனவும் வாசிம் அக்ரம் பேசினார்.