வரட்டா மாமே டுர்… சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக துபாய் புறப்பட்ட இந்திய வீரர்கள்!
வரும் 19ம் தேதி தொடங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி துபாய் புறப்பட்டது.

அபுதாபி : ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, வரும் 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் 20ம் தேதி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.
இத்தொடருக்காக, பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுத்துவிட்டதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன. இதற்காக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றது.
மும்பையில் இருந்து புறப்பட்டதில் இந்திய வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் குழுவில் இந்திய கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஹார்டிக் பாண்ட்யா உள்ளிட்டோர் பயணிக்கின்றனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய உத்தரவுப்படி, கிரிக்கெட் வீரர்களுடன் குடும்பங்கள் செல்ல அனுமதி இல்லை. இதன் நோக்கம் போட்டியின் போது அணி ஒற்றுமையையும் கவனம் செலுத்துவதையும் என்று BCCI அறிவுறுத்தியுள்ளது.
ஒருவேளை இந்த சுற்றுப்பயணத்தின் போது, வீரர் தனது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்ல விரும்பினால், குடும்ப உறுப்பினர்களின் அனைத்து செலவுகளையும் வீரரே ஏற்றுக்கொள்ள வேண்டும். வீரரின் குடும்ப உறுப்பினர்களின் செலவை பிசிசிஐ ஏற்காது ன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபி அணியில் கடைசி நேரத்தில் இரண்டு மாற்றங்களை இந்தியா செய்தது. ஜஸ்பிரித் பும்ரா போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.