இருவேடத்தில் களமிறங்குகிறார் த்ரிஷா…!!!!
திரிஷா நடிக்கும் புதிய படத்துக்கு ‘ பரமபதம் விளையாட்டு என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படம் பற்றி இயக்குனர் திருஞானம் கூறியதாவது: மருத்துவராகவும், மருத்துவரின் தாய் ஆகவும் இருவேடத்தில் திரிஷா இதில் நடிக்கிறார். இதன் இறுதி கட்டட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ்மெண்க்ஷனில் நடக்கிறது. இது போன்ற கதையில் திரிஷா முதன் முறையாக நடிக்கிறார். கதையை கேட்டவுடன் தனது கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார். கடினமான காட்சிகளில் கூட ஒரே டேக்கில் நடித்தார்.
சரியானவற்றை சரியான இடத்தில சரியான நேரத்தில் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் சரியான ஒரு விசயத்தை தவறான நேரத்தில் சொல்வதால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பது தான் இப்படத்தின் கரு.
திருப்பங்கள் நிறைந்த கதையாக உருவாகி வருகிறது. இதில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு அம்ரிஷ் இசை.
இவ்வாறு இயக்குனர் கூறினார்.