விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறியதற்காக பாகிஸ்தான் மூன்று வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 25% (அஃப்ரிடி) மற்றும் 10% (ஷகீல் & குலாம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

ICC Conduct

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சவுத் ஷகீல் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் போட்டியின்போது, தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸின் 28வது ஓவரில், பேட்டர் மேத்யூ பிரீட்ஸ்கே ஒரு சிங்கிள் அடிக்க முயன்றபோது, ​​ஷாஹீன் வேண்டுமென்றே அவரைத் தடுத்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து இரு வீரர்களுக்கும் இடையே ஒரு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், தென்னாப்பிரிக்க வீரர் டெம்பா பவுமா 29வது ஓவரில் ஆட்டமிழந்த பிறகு, அருகில் கொண்டாடியதற்காக மிடில் ஆர்டர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூவுடனான மோதலுக்காக அஃப்ரிடிக்கு 25% அபராதமும், பவுமாவின் விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடியதற்கு ஷகீல், குலாம் ஆகியோருக்கு தலா 10% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் இல்லாமல், ஐசிசி விதிகளை மீறியதற்காக, மூன்று வீரர்களும் தங்கள் ஒழுக்கற்று பதிவுகளில் ஒரு தகுதி நீக்கப் புள்ளியைப் பெற்றனர். கடந்த 24 மாதங்களில் அந்த மூவர்களில் யாரும் இதற்கு முன் எந்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை. இருப்பினும் மேலும் விதி மீறல்கள் நடைபெற்றால் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

போட்டியின் நடுவர்கள் நால்வர் தான், இந்த மூன்று பாகிஸ்தான் வீரர்கள் மீதும் இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். அதன்படி, மூன்று வீரர்களும் தங்கள்து தவறுகளை ஒப்புக்கொண்டு தங்கள் பெனால்டிகளை ஏற்றுக்கொண்டனர், இதனால் முறையான விசாரணை நிறுத்தப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்