இந்தியாவுக்கு சவால் விட்ட இங்கிலாந்து வீரர்..”இப்படியெல்லாம் பேசக்கூடாது”..கெவின் பீட்டர்சன் பதிலடி!

இந்திய ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைப்பது என்பது மிகப்பெரிய ஒரு வாய்ப்பு என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியிருக்கிறார்.

ben duckett Kevin Pietersen

டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” நாங்கள் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறோம். இந்தியாவிடம் நாங்கள் தோல்வி அடைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. இந்தியாவிடம் நாங்கள் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை.

ஆனால், இந்த நேரத்தில் நான் சொல்லி கொள்ள விரும்புவது என்னவென்றால், நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் நாங்கள் அவர்களை (இந்தியாவை)  வீழ்த்துவோம்” என வெளிப்படையாக சவால் விட்டு பேசியிருந்தார்.  இந்நிலையில் இந்தியாவுக்கு சவால் விடும் வகையில் பென் டக்கெட் பேசியிருந்த நிலையில், அவருடைய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியிருக்கிறார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது “பென் டக்கெட் பேசிய வார்த்தைகள் சரியான வார்த்தைகளாக இல்லை. முதலில் நாம் நாம் விளையாடும் போட்டிகளில் வெற்றிபெறவேண்டும்.

தோல்வி அடைந்தாலும் அதைப்பற்றி பேசாமல் அதனை கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால், இந்தியாவில் நாம் விளையாடுவதில் கவலை இல்லை என்பதுபோல் டக்கெட் கூறியிருக்கிறார். இது ஒரு வகையான தோரணையை காட்டுகிறது. என்னைப்பொறுத்தவரை ஒரு அணியின் வீரர்கள் இப்படி நினைக்கக்கூடாது. நாம் ஒரு நாட்டிற்காக விளையாடுகிறோம் என்பதை நினைத்து பெருமை தான் படவேண்டும்.

பல இங்கிலாந்து வீரர்கள் இங்கு வந்து விளையாட விரும்புகிறார்கள். இந்திய ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைப்பது என்பது மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்புகளை புரிந்து கொண்டு விளையாடவேண்டுமே தவிர அவர்களுக்கு சவால் விடும் வகையில் பேசுவது தவறு. இவ்வளவு பெருமை வாய்ந்த தருணத்தில், இங்கிலாந்து அணி இது பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்கிறது என்ற கருத்து வருவது வருத்தமாக உள்ளது” எனவும் கெவின் பீட்டர்சன் பதிலடி கொடுத்ததோடு..அட்வைஸ் செய்யும் வகையில் பேசினார்.

மேலும், இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்தித்தது. டி20 தொடரில் 4-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரில் 3-0 என்ற கணக்கிலும் இந்தியா வெற்றிபெற்றது. இந்த சூழலில், தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை இருப்பினும் இப்படியா பேசுவது என பென் டக்கெட்  விட்ட சவாலுக்கு இந்தியாவின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்