“நாங்க செய்யவில்லையா? நீங்க பார்த்தீங்ளா?” ரவி சாஸ்திரி விமர்சனமும்., இங்கிலாந்து கேப்டன் பதிலும்.,

இங்கிலாந்து அணி முறையாக நெட் பயிற்சிகளை செய்யவில்லை என்ற ரவி சாஸ்திரி கூற்றை ஜோஸ் பட்லர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

England Captain Jos Butler - Ravi shastri

அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் என இரண்டு தொடர்களில் விளையாடியது. இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2 தொடர்களிலும் மோசமான தோல்வியை கண்டுள்ளது.

இந்த தொடரில் இந்தியாவுக்கு எதிராக மொத்தமாக நடைபெற்ற 8  போட்டிகளில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மற்ற அனைத்து போட்டிகளிலும் மோசமான தோல்வி தான் பரிசாக கிடைத்தது. இங்கிலாந்து அணி 2023 உலக கோப்பை கிரிக்கெட்டிற்கு பிறகு விளையாடிய ஒருநாள் தொடர்கள் அனைத்தையும் இங்கிலாந்து அணி இழந்துள்ளது.

நெட் பயிற்சியில் ஈடுபடவில்லை?

இந்தியாவில் இங்கிலாந்து அணி சந்தித்த மோசமான தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில், ” இந்திய அணிக்கு எதிராக 8 போட்டிகள் கொண்ட இந்த முழு பயணத்திலும் இங்கிலாந்து அணி ஒரே ஒரு முறை மட்டுமே நெட் செஷன் (நெட்டில் பயிற்சி) மட்டுமே இருந்தது. கட்டாக் (2வது ஒருநாள்) மற்றும் அகமதாபாத்தில் (3வது ஒருநாள்) நடந்த கடைசி இரண்டு 50 ஓவர் போட்டிகளுக்கு முன்பும் இங்கிலாந்து அணிக்கு நெட் செஷனில் (நெட் பயிற்சியில்) ஈடுபடவில்லை” என குற்றம் சாட்டினார்.

பட்லர் மறுப்பு :

இந்த கூற்றை இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முற்றிலுமாக மறுத்தார். எங்கள் அணி கடைசி 2 முறை வேண்டுமானால் நெட் பயிற்சி மேற்கொள்ளலாம் இருந்திருக்கலாம். ஆனால் நிறைய முறை நெட் பயிற்சி செய்தோம் எனக் கூறினார்.மேலும், ” நாங்கள் வெற்றிபெற ஒரு நல்ல சூழலை உருவாக்க முயற்சிக்கிறோம். ஆனால், அதை ஒரு சோம்பேறி சூழல் அல்லது வெற்றிக்கு நாங்கள் முயற்சி செய்யவில்லை என்றோ தவறாக நினைக்க வேண்டாம். வீரர்கள் சிறப்பாக செயல்படவும், அவர்கள் திறனை மேம்படுத்தவும்மிகத்தீவிரமாக உள்ளனர்.

நாங்கள் நம்பிக்கையை வளர்த்து, ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம். தோல்விகளை சந்திப்பதை விட போட்டிகளில் வெற்றி பெறுவது மிக நன்றாக இருக்கும். அவர்களின் சொந்த மண்ணில் நாங்கள் ஒரு நல்ல அணியை எதிர்கொண்டோம். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அளவுகோல் இருக்கிறது.

சவாலான அணியாக மாறுவோம்.,

நாங்கள் எங்கள் முழு திறமையை வெளிக்காட்டி விளையாடவில்லை என்று நினைக்கிறோம். சில தருணங்களை நாங்கள் போட்டிகளில் எதிர்கொண்டோம். கடந்த மூன்று போட்டிகளில் வெற்றிக்கு அருகில் செல்லவோ, வெற்றி பெறுவது போல் நினைக்கவைக்கவோ இல்லை. ஆனால், நாங்கள் இன்னும் எங்கள் திறமைக்கு அருகில் செல்லவே இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த தொடர் மூலம் நாங்கள் கற்றுக்கொண்டு சாம்பியன்ஸ் டிராபியில் நாங்கள் அங்கு சென்று சவாலான அணியாக இருக்க முடியும் என்று நம்புகிறோம்,” என தோல்வி குறித்தும் தங்கள் அணியின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்