“அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும்.., என்னை சோதிக்காதீர்கள்!” இபிஎஸ் பெயரை தவிர்த்த செங்கோட்டையன்!
என்னை சோதிக்காதீர்கள். பல வாய்ப்புகள் வந்தபோதும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவன் நான் மறந்துவிடாதீர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
![ADMK Former minister Sengottaiyan - ADMK Chief secretary Edappadi palanisamy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ADMK-Former-minister-Sengottaiyan-ADMK-Chief-secretary-Edappadi-palanisamy.webp)
ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்புகள் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டிருந்தார். ஆனால், கோபி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது .
செங்கோட்டையன் விளக்கம் :
இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை என பல்வேறு யூகங்கள் செய்திகளாக வெளிவந்தன. ஆனால், அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் புகைப்படங்கள் நிகழ்ச்சி அழைப்புகளிலும், நிகழ்ச்சி நடைபெறும் மேடைகளிலும் இல்லை என்ற காரணத்தை கூறி அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்திருந்தார். இருந்தும் இது பற்றிய பேச்சுக்கள் குறைந்தபாடில்லை.
இபிஎஸ் பெயர் இல்லை :
இந்நிலையில் நேற்று ஈரோட்டில் நடைபெற்ற எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழாவில் மீண்டும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் செங்கோட்டையன் பேசி உள்ளார். அவர் கூறுகையில், ” 14 முறை நான் புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா) அவர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். 1972-ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை தொடங்கினார். அப்போது இருந்தே பல்வேறு சோதனைகள். அப்படி ஒரு தலைவனுக்கு வந்த சோதனை எந்த தலைவருக்கும் வந்ததில்லை. இப்போது இந்த விழா பொதுச்செயலாளர் உத்தரவின் பெயரில் இங்கு நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்த காரணத்தினால் கடந்த மாதம் நடக்க இருந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.” என எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிடாமல் பொதுச்செயலாளர் என்று மட்டும் செங்கோட்டையன் குறிப்பிட்டு பேசினார்.
நான் எதுவும் சொல்லப்போவதில்லை..,
மேலும்,” பத்திரிக்கையாளர்கள் என்னிடம் என்ன சொல்ல போகிறீர்கள் என்று கேட்டார்கள், நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்று கூறினேன். இப்போதும் நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனை ஆண்டுகாலம் அரசியல் இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எத்தனை தலைவர்களை பார்த்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். எதுவும் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறீர்கள். எதுவும் கிடைக்காது. நான் செல்லும் பாதை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வகுத்த பாதை அவர்கள் இரண்டு பேரும் தான் நமக்கு வழிகாட்டி. அவர்கள் இல்லை என்றால் அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் இல்லை.
மீண்டும் விளக்கம் :
நான் அன்றைய நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உடனே பத்திரிக்கை பரபரப்பாகி விட்டது . நான் அந்த கூட்டத்தை புறக்கணிக்கவில்லை. கலந்து கொள்ளவில்லை அவ்வளவு தான். என்னை வாழ வைத்தவர்கள் புகைப்படங்கள் அங்கு இல்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதனை பற்றி கவலைப்படவில்லை. இயக்கம் (அதிமுக) ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். மறந்துவிடக்கூடாது. என்னை சோதிக்காதீர்கள். அதுதான் என்னிடத்தில் நான் வைக்கும் வேண்டுகோள் இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்று வெளிப்படையாக எதையும் கூறாமல் அந்த விழாவில் பேசி முடித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
லேட்டஸ்ட் செய்திகள்
“செங்கோட்டையன் விசுவாசமானவர்.. இதை செய்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு” – ஓ.பன்னீர்செல்வம்.!
February 13, 2025![ops -sengottaiyen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ops-sengottaiyen.webp)
விரைவில் எம்பி-யாகும் கமல்ஹாசன்? துணை முதல்வருடன் ‘திடீர்’ சந்திப்பு!
February 13, 2025![udhayanidhi stalin and kamal haasan](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/udhayanidhi-stalin-and-kamal-haasan.webp)
இந்தியாவுக்கு சவால் விட்ட இங்கிலாந்து வீரர்..”இப்படியெல்லாம் பேசக்கூடாது”..கெவின் பீட்டர்சன் பதிலடி!
February 13, 2025![ben duckett Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ben-duckett-Kevin-Pietersen.webp)