இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி… 3-வது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி.!
அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
![India vs England 3rd ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/India-vs-England-3rd-ODI.webp)
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 3-0க்கு என்ற கணக்கில் வென்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனை தெடர்ந்து நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது
இந்த நிலையில், அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 357 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி, 34.2 ஓவர்களில் 214 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
குறிப்பாக, இந்தியா அணி தரப்பில் அதிகமாக சுபமன் கில் 102 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். அதேசமயம், ஷ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களும், விராட் கோலி 52 ரன்களும், கே.எல். ராகுல் 40 ரன்களும் எடுத்தனர். முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இந்தியா 50 ஓவர்களில் 356 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அந்த இலக்கை தொடர்ந்த இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தொடரில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.
இந்திய அணி ஆட்டம்
முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி சார்பாக, ஷுப்மான் கில் 112 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களும், விராட் கோலி 52 ரன்களும் எடுத்தனர். கே.எல்.ராகுல் 40 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 1, ஹர்திக் பாண்ட்யா 17, அக்சர் படேல் 13, வாஷிங்டன் சுந்தர் 14, ஹர்ஷித் ராணா 13, அர்ஷ்தீப் சிங் 2 ரன்களில் அவுட்டாகினர். குல்தீப் யாதவ் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா இங்கிலாந்தில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து அணி ஆட்டம்
இங்கிலாந்து தரப்பில், பில் சால்ட் 23 ரன்கள், பென் டக்கெட் 34, டாம் பான்டன் 38, ஜோ ரூட் 24, ஹாரி புரூக் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். கஸ் அட்கின்சன் 38 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர் 6, லியாம் லிவிங்ஸ்டோன் 9, அடில் ரஷித் கணக்கைத் திறக்காமலேயே ஆட்டமிழந்தனர். மார்க் வுட் 9 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார், மேலும் சாகிப் மஹ்மூத் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், அடில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்க் வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாகிப் மஹ்மூத், கஸ் அட்கின்சன் மற்றும் ஜோ ரூட் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இறுதியில், இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் அடுத்த போட்டி பிப்ரவரி 20 அன்று நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025![Seeman - Sampathkumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Seeman-Sampathkumar.webp)