விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா வாய்ஸ் ஓவர்… கவனம் ஈர்க்கும் ‘கிங்டம்’ டீசர்.!
தற்காலிகமாக 'VD 12' என்று அழைக்கப்பட்ட விஜய் தேவரகொண்டாவின் படத்தின் தலைப்பு டீசருடன் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டு படக்குழு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் மே 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக காதல் படங்களில் ஜாக்கோ பாயாக வலம்வரும் விஜய் தேவரகொண்டா, இந்த படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். டீசரில், விஜய் தேவரகொண்டா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. போருக்குத் தயாராக இருக்கும் ஹீரோவாக அவர் எப்படி உருமாறுகிறார் என்பதற்கான அதிரடியான காட்சியை வழங்குகிறது.
அவரது கரடுமுரடான, போருக்குத் தயாரான தோற்றம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சொல்லப்போனால், டீசர் ஒரு வன்முறை, உணர்ச்சிபூர்வமான ஆக்ஷன் படம் என்பதை எடுத்து காட்டுகிறது. படத்தின் மேக்கிங் ஸ்டைல் மற்றும் பிரேம்ஸ், சாலார், கேஜிஎஃப் போன்ற படங்களின் சாயல் போல் இருப்பதாக தெளிவாகத் தெரிகிறது.
டீசரின் முக்கிய கவன ஈர்ப்பு வாய்ஸ் ஓவர் ஆகும். ஆம், தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் தமிழ் டீசருக்கு சூர்யா பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும், இந்தியில் ரன்பீர் கபூர் மற்றும் தெலுங்கில் என்.டி.ஆர் கொடுத்திருக்கிறார்.