விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவர் என தகவல் வெளியாகியுள்ளது.

Sunita Williams

கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, முன்னர் அறிவித்ததை விட சில வாரங்களுக்கு முன்னதாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் கொண்டு வர முடியும் என்று கூறியுள்ளது. ஆம், கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் பூமிக்கு திரும்பவுள்ளார்.

அதன்படி, மார்ச் 25ஆம் தேதிக்கு பதிலாக 12ஆம் தேதியே விண்ணில் ஏவப்படும் SpaceX விண்கலம், புட்ச் வில்மோர் மற்றும்  சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்டதற்கு காரணம் பைடன்தான் என்று அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது, இந்த இரண்டு விண்வெளி வீரர்களும் எட்டு நாள் பணிக்காக அனுப்பப்பட்டனர், அவர்கள் போயிங்கின் ஸ்டார்லைனர் காப்ஸ்யூலில் திரும்ப வேண்டியிருந்தது. இருப்பினும், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மீண்டும் மீண்டும் தாமதங்கள் ஏற்பட்டது. இதனால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர்கள் தங்குவது ஒன்பது மாதங்களுக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்