“பேத்தி வேண்டாம்.. பேரன் வேண்டும்” – நடிகர் சிரஞ்சீவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை.!

தனது மகன் ராம்சரண் அடுத்த முறையும் பெண் பிள்ளை பெற்று விடுவாரோ என அஞ்சுவதாகவும், தலைமுறை தலைக்க ஆண் குழந்தை வேண்டும் என நடிகர் சிரஞ்சீவி பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.

chiranjeevi - RAM SARAN

ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். இப்படி இருக்கையில், விழா ஒன்றில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, “ராம் சரணின் பரம்பரை தொடர, அவருக்கு மகளுக்குப் பதிலாக ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக” கூறினார்.

சிரஞ்சீவிக்கு ஸ்ரீஜா கொனிடேலா மற்றும் சுஷ்மிதா கொனிடேலா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு நவிஷ்கா, நிவராதி, சமாரா மற்றும் சமித் என நான்கு பேத்திகளும் உள்ளனர். மேலும் அவரது மகன் ராம் சரணுக்கும் 20 ஜூன் 2023 அன்று க்ளீன் காரா என்ற மகள் பிறந்தது.

இந்த நிலையில், ‘பிரம்ம ஆனந்தம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன், நேற்றைய தினம் நடைபெற்ற நடந்த ஒரு நிகழ்வில் பேசிய சிரஞ்சீவி, “நான் வீட்டில் இருக்கும்போது, ​​பேத்திகள் என்னைச் சுற்றி இருப்பதாக எனக்குத் தோன்றுவதில்லை. நான் பல பெண்களால் சூழப்பட்ட ஒரு விடுதி வார்டன் போல உணர்கிறேன். வேறு எதுவும் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் நம் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு மகனையாவது பெற்றெடுக்க வேண்டும் என்று ராம் சரணிடம் கூறுகிறேன்” என்று கூறினார்.

சிரஞ்சீவி கூறிய கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன. சில பயனர்கள் அவரது கருத்துக்களை கேலியாக எடுத்துக்கொண்டாலும், மற்றவர்கள் ஒரு மகனுக்கும் மகளுக்கும் இடையில் வேறுபடுத்துகிறார் என்று அவரை விமர்சித்தனர். இந்த சர்ச்சையால் சிரஞ்சீவி தொடர்ந்து சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

ஒரு பயனர், “இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்து, அவர்   சிரஞ்சீவி கருத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏய், அவள் ஒரு பெண்ணாக இருந்தால், அவர் ஏன் பயப்பட வேண்டும். மகள்களும் மரபை முன்னெடுத்துச் செல்கிறார்கள். மற்றொரு பயனர் “சிரஞ்சீவி தனது மகன் ராம் சரணுக்கு ஒரு மகள் பிறக்கக்கூடும் என்று பயப்படுகிறார். 2025 இல் கூட அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். இது ஏமாற்றமளிக்கிறது, ஆனால் ஆச்சரியமல்ல” என்று கடமையாக விமர்சனம் செய்து கருத்துக்ளை பதிவிட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்