INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு! பேட்டிங் களத்திற்கு தயாரான இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனை தெடர்ந்து நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளது. கடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் தேர்வு செய்து அந்த அணி தோல்வியை தழுவி இருந்தது. இந்த முறை டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் :
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள் :
ஜோஸ் பட்லர் தலைமையில் பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், டாம் பான்டன், லியாம் லிவிங்ஸ்டோன், கஸ் அட்கின்சன், அடில் ரஷித், மார்க் வுட், சாகிப் மஹ்மூத் ஆகியோர் விளையாட உள்ளனர்.