திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
![senthil balaji edappadi palanisamy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/senthil-balaji-edappadi-palanisamy-.webp)
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மகிழ்ச்சியை தெரிவித்ததோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்திருக்கிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உழைப்பிற்கும், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!
குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு தோல்விசாமி அவர்கள் இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்களை சந்திக்க முடியாமலும் திமுகழகத்தை எதிர்க்க துணிவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்துக் கொண்டார்.
வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என அறிவித்து செயல்பட்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்; அதன் காரணமாக இன்று ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுக விற்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; “Pro Incumbency” தான் எங்கும் எதிரொலிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக்கொண்டிருகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்!” எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உழைப்பிற்கும், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!… pic.twitter.com/mIGKBJbscV
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) February 12, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் காயம்,.. காரணத்தை விளக்கி ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!
February 12, 2025![Bus Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Bus-Accident-.webp)
சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!
February 12, 2025![marcus stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/marcus-stoinis-1.webp)
அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!
February 12, 2025![O. Panneerselvam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/O.-Panneerselvam.webp)
காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!
February 12, 2025![TAMIL MOVIES](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TAMIL-MOVIES.webp)