“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தனிப்பட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்த தொடரில் ஆஸ்ரேலியா அணி தங்களுடைய முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மிட்செல் ஸ்டார்க் விலகல்
இந்த சூழலில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனிப்பட்ட சில காரணங்களுக்காக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி பேசுகையில் ” மிட்செல் ஸ்டார்க், தனது முடிவு குறித்து தனியுரிமை கோரியுள்ளார். அவர் காலேயில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போதே கொஞ்சம் அசௌகரியமாக இருந்தார். முடிவை புரிந்து கொண்டு மதிக்கிறோம் என்று கூறியுள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட்டிற்கான தனது அர்ப்பணிப்பு மற்றும் ஆஸ்திரேலிய அணிக்காக தனது செயல்பாட்டிற்கு பல விஷயங்களை செய்திருக்கிறார்.
எனவே, அவருடைய முடிவை மதிப்பது தான் சிறந்தது. ஸ்டார்க், வலி மற்றும் துன்பங்களை தாண்டி விளையாடக்கூடிய திறன் கொண்டவர. ஆனால், இந்த முறை அவர் தனியுரிமை கோரி இருப்பதன் காரணமாக நாங்கள் அவருக்கு அனுமதி வழங்குகிறோம்” என தெரிவித்துள்ளார்.
தடுமாறும் ஆஸ்திரேலிய அணி
ஏற்கனவே, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெருவதாக திடீரென அறிவித்து இருந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக அவர் விலகியது அணிக்கு முக்கிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், அணியின் முக்கிய பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இரண்டு முக்கியமான வீரர்கள் அணியில் இல்லாமல் எப்படி அணி தடுமாறாமல் விளையாடப்போகிறது என்கிற கேள்வியும் எழும்பியுள்ளது.