பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணாவும், ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்கரவர்த்தியும் இடம் பெற்றுள்ளனர்.

Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal

மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன. பிப்ரவரி 20-ல் வங்கதேச கிரிக்கெட் அணியையும், பிப். 23-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், மார்ச் 2-ல் நியூசிலாந்து கிரிக்கெட் அணியையும் ரோஹித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உத்தேச அணியில் தற்போது பல்வேறு அதிரடி மாற்றங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.  முதலில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய உத்தேச அணி என்ற பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.

பழைய அணி :

அதில், கேப்டனாக ரோஹித் சர்மா, துணை கேப்டனாக சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகிய 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.

இதில் பும்ரா-விற்கு பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி ஆட்டத்தில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், அவரால் சாம்பியனாஸ் டிராபி தொடரில் பங்கேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அவர் இல்லை என்றால் அந்த இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வி எழுந்தது. நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பும்ரா – ராணா :

அதன்படி,  முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகியுள்ளார். பும்ராவுக்கு பதிலாக அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா விளையாட உள்ளார்.

ஜெய்ஸ்வால் – வருண் சக்கரவர்த்தி :

அதே போல இன்னொரு மாற்றமாக, பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக இந்திய அணியில் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் நன்றாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாற்று வீரராக கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார்.இதனால் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

புதிய அணி :

இதன் மூலம் தற்போது துபாய் செல்லும் இந்திய அணி பட்டியலில், கேப்டனாக ரோஹித் சர்மா, துணை கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யயாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.

துபாய் செல்லாத மாற்று வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே ஆகிய மூன்று வீரர்களும் உள்ளனர். மேற்கண்ட 15 பேர் கொண்ட அணி வீரர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இவர்கள் தேவைப்படும்போது துபாய்க்கு செல்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rohit sharma and virat kohli
Rohit sharma - Virat kohli
Andhra Pradesh CM N Chandrababu naidu
senthil balaji edappadi palanisamy
Dragon Movie Budget
ADMK Chief secretary Edappadi Palanisamy - Madras High court