INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

IND vs ENG, 3வது ஒருநாள் போட்டியின் போது, இந்திய அணி வீரர்களின் சாதனைகள் மற்றும் நெருங்கி வரும் மைல்கற்களின் புள்ளிவிவரங்கள் பற்றி காண்போம்.

ind vs eng odi

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி) நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 நாள் ஒரு நாள் தொடரின் முந்தைய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2-0 என்ற முன்னிலையுடன், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் உள்ளது.

அதே நேரத்தில் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபி 2025 க்கு முன்னதாக, ஒயிட்வாஷைத் தவிர்த்து வெற்றியைப் பெற முயற்சிக்கும். இப்படி இருக்கையில், நாளைய போட்டியின்போது, இந்திய வீரர்கள் எடுக்கப்போகும் ஒவ்வொரு ரன்கள் மற்றும் விக்கெட்டுகளில் சாதனை பட்டியலில் இடம்பிடிக்கவுள்ளனர்.

அந்த வரிசையில் யார் யார் என்ன சாதனை படைக்க காத்திருக்கிறார்கள். அவர்களை பற்றி ஒரு பார்வை பார்ப்போம்.

  • விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களைஎட்டுதற்கு 89 ரன்கள் தேவை.
  • ரோஹித் சர்மா: ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்களை எட்டுதற்கு 13 ரன்கள் தேவை.
  • ரோஹித் சர்மா: சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 9000 ரன்களை எட்டுதற்கு 67 ரன்கள் தேவை.
  • முகமது ஷமி: 200 ஒருநாள் விக்கெட்டுகளை முறியடிக்க 3 விக்கெட்டுகள் தேவை.
  • ஷுப்மான் கில்: ஒருநாள் போட்டிகளில் 2,500 ரன்களை முறியடிக்க  25 ரன்கள் தேவை.
  • ஷுப்மான் கில்: நாளைய போட்டியில் இடம்பெற்றால், அவர் தனது 50வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
  • ஹர்திக் பாண்ட்யா: சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை முறியடிக்க 4 விக்கெட்டுகள் தேவை.
  • குல்தீப் யாதவ்: சர்வதேச கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை முறியடிக்க 2 விக்கெட்டுகள் தேவை.
  • ரவீந்திர ஜடேஜா: நாளைய போட்டியில் இடம்பெற்றால், அவர் தனது 200வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
  • ரவீந்திர ஜடேஜா: இங்கிலாந்துக்கு எதிராக 50 ஒருநாள் விக்கெட்டுகளை முறியடிக்க 5 விக்கெட்டுகள் தேவை.
  • அடில் ரஷீத்: சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை எட்டுவதற்கு  1 விக்கெட் தேவை.
  • அடில் ரஷீத்: சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணுக்கு வெளியே 250 விக்கெட்டுகளை முறியடிக்க 5 விக்கெட்டுகள் தேவை.
  • ஜோஸ் பட்லர்: சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 2000 ரன்களை முறியடிக்க 6 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்