லீக்கான நடிகைகள் பற்றிய ‘அந்த’ தேடல்…மௌனம் கலைத்த ரியான் பராக்!
வைரலான யூடியூப் தேடல் சர்ச்சை குறித்து கிரிக்கெட் வீரர் ரியான் பராக் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.
![riyan parag](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/riyan-parag.webp)
சென்னை : சினிமா உலகை போல கிரிக்கெட்டில் இருக்கும் சிலரும் அடிக்கடி சில சர்ச்சையான விஷயங்களில் சிக்கிவிட்டு விஷயம் பெரிதாக வெடித்த பிறகு விளக்கம் அளிப்பார்கள். மேலும் சிலர் இதனை பற்றி நாம் விளக்கம் கொடுத்தால் இன்னுமே இது பெரிய விஷயமாக மாறிவிடும் என்பதால் அமைதியாக இருப்பார்கள். அப்படி இல்லை என்றால் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும்போது இதனை பற்றி கேள்விகள் கேட்டால் பதில் சொல்லுவார்கள். அப்படி தான் இந்திய கிரிக்கெட் வீரர் ரியான் பராக் கடந்த ஆண்டு ஒரு சர்ச்சையில் சிக்கி இருந்த நிலையில், அது குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.
என்ன சர்ச்சை?
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு ரியான் பராக் தன்னுடைய யூடியூப் சேனல்களில் கேமிங்க்கான நேரலையை தொடங்கினார். அப்போது, நேரலையில் சேனல் உள்ளது என்பது தெரியாமல் தன்னுடைய யூடியூபில் சர்ச் ஹிஸ்டரியை மறைக்காமல் விட்டுவிட்டார். அதில் தான் பாலிவுட் நடிகைகள் குறித்து சர்ச்சைக்கூறிய வகையில் ரியான் பராக் தேடி பார்த்ததும் தெரியவந்தது.
என்ன தேடியிருந்தார்?
அவர் தன்னுடைய யூடியூபில் பாலிவுட் நடிகைகளான “Ananya Panday ht” மற்றும் “Sara Ali Khan ht” போன்றவற்றை தேடியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் உடனடியாக அதனை ஸ்கிரீன்ஷாட் செய்த நிலையில், இந்த விஷயம் வைரலாக தொடங்கிவிட்டது. ஒரு சிலர் இது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என ஆதரவு தெரிவித்தாலும் மற்றோரு பக்கம் விமர்சனங்களும் எழுந்தது.
விளக்கம் கொடுத்த ரியான் பராக்
இந்த சம்பவம் அந்த சமயம் சர்ச்சையாக வெடித்தபோதிலும் இது என்னுடைய சர்ச் ஹிஸ்டரி இல்லை என்பது போல விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது குறித்து அவர் எதுவும் பேசாமலே இருந்தார். இதனையடுத்து, தற்போது City1016 ரேடியோ ஸ்டேஷனில் பேட்டியளித்த அவர் முதல் முறையாக இந்த விவகாரம் பற்றி பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு, நாங்கள் சென்னையில் இருந்தோம். போட்டி முடிந்த பிறகு, என் டிஸ்கார்ட் குழுவினருடன் அழைப்பு வைத்து பேசினேன். இப்போது இது வைரலாக பரவியது, ஆனால் உண்மையில் இது ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பே நடந்தது.
அந்த சீசன் எனக்கு சிறப்பாக அமைந்த நேரத்தில் இந்த விஷயம் மீண்டும் அதிக அளவில் பேசப்பட்டது.இதனை பார்க்காமல் நான் லைவ் ஸ்ட்ரீம் ஆரம்பித்துவிட்டேன். என் மொபைலில் Spotify அல்லது Apple Music இல்லை. எல்லாமே அழிக்கப்பட்டிருந்தது. அதனால், YouTube-ல் சென்று பாடல்களை தேடினேன். என்ன நடக்கிறது என எனக்கு தெரியவில்லை. ஆனால் ஸ்ட்ரீம் முடிந்ததும், லீக்கான விஷயத்தை பார்த்து ஐயோ இப்படி ஆகிவிட்டதே என நினைத்தேன்.
இது தேவையில்லாத அளவுக்கு பெரிதாகப் பேசப்பட்டது. இதற்காக நான் தனியாகசென்று விளக்கம் சொல்ல வேண்டிய அளவுக்கு இது பெரிய விஷயமா என நினைக்கவில்லை. என்ன சொன்னாலும் யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள்” எனவும் மனதில் வேதனையை வைத்துக்கொண்டு ரியான் பராக் இந்த விஷயத்தை பற்றி பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)