கேமிங் பிரியர்களே உங்களுக்கு தான்! Realme P3 Pro -வின் சிறப்பு அம்சங்கள்!
கேமிங்காக பல அம்சங்களை கொண்டு இருக்கும் 'Realme P3 Pro' போனானது வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது.
![realme p3 series](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/realme-p3-series.webp)
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ மாடல் கொண்ட போனை உபோயகம் செய்து வருபவர்களில் ரியல்மீயில் சிறந்த கேமிங் அம்சங்கள் கொண்ட போன்கள் வருமா? என காத்திருப்பது உண்டு. அப்படி காத்திருப்பவர்களுக்காகவே ரியல்மீ நிறுவனம் ‘Realme P3’ சீரியஸ் போனை கொண்டுவரவிருக்கிறது.
இந்த போனின் சீரிஸில் எத்தனை மாடல்கள் வருகிறது… விலை எவ்வளவு? என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது கேமிங்காக என்னவெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது? எப்போது அறிமுகம் ஆகும் என்பதற்கான விவரங்கள் வெளியாகியுள்ளது. அதனைப்பற்றி விவரமாக பார்க்கலாம்..
கேமிங்க்கான சிறப்பு அம்சங்கள்
GT Boost தொழில்நுட்பம்: KRAFTON ( கேமிங் வெளியிடும் நிறுவனம்) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், AI Ultra-Steady Frames, Hyper Response Engine, AI Ultra Touch Control, AI Motion Control போன்ற அம்சங்களை வழங்குகிறது, இதனால் கேமிங் அனுபவம் வழக்கத்தை விட கொஞ்சம் பேட்டராகவே இருக்கும்.
Snapdragon 7s Gen 3 சிப்: இந்த புதிய சிப், 20% அதிக CPU செயல்திறன் மற்றும் 40% அதிக GPU செயல்திறனை வழங்குகிறது, இதனால் கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங் செயல்பாடுகள் மேம்படும். கேமிங் விளையாடி கொண்டு அடுத்தடுத்து வேறு டேப்களுக்கு செல்கிறீர்கள் என்றால் கூட எந்த விதமான லேக் பிரச்சினை இருக்காது.
பொதுவாகவே அதிகமாக கேமிங் விளையாடும்போது போன் ஹிட் பிரச்சினை அதிகமாக இருக்கும். அந்த ஹிட்டை கட்டுப்படுத்த இப்போது வரும் போன்களில் சில தொழிநுட்பங்களும் கொண்டு வரப்படுகிறது. அப்படி தான் இந்த ‘Realme P3 Pro’ -வில் Aerospace VC கூலிங் அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. 6050mm² உடன் வருவதால் ஹிட் பிரச்சனை வராது. அப்படியே வந்தாலும் கூட உடனடியாக கூலிங் செய்துவிடும். இதனால் நீண்ட நேரம் கூட கேமிங் விளையாடி கொள்ளலாம்.
6000mAh பேட்டரி : கேம் விளையாடுபவர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது சார்ஜ் வேகமாக குறைவது தான். அதனையும் தீர்வு செய்து கொடுக்கிறோம் என்ற நோக்கத்தோடு 6000mAh பேட்டரி வசதியை கொண்டு வந்துள்ளது. எனவே, நீண்ட நேரம் கேம் விளையாடலாம். அதைப்போல, 80W வேக சார்ஜிங் வசதியும் வருவதால் விரைவாக ஜார்ச் கூட செய்துகொள்ளலாம்.
இந்த அம்சங்கள் அனைத்தும் Realme P3 Pro-வை கேமிங் பிரியர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
விலை எவ்வளவு?
ரியல்மி பி3 ப்ரோவின் விலை ரூ.25,000 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது மூன்று வகையான மாடல்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Realme P3: இந்த மாடல் 6GB RAM + 128GB, 8GB RAM + 128GB, மற்றும் 8GB RAM + 256GB என மூன்று வகைகளில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.19,990 ஆக இருக்கலாம்.
Realme P3 Pro: இது 8GB RAM + 256GB மற்றும் 12GB RAM + 256GB என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.27,990 ஆக இருக்கலாம்.
Realme P3 Ultra: இந்த மாடல் 12GB RAM + 256GB உள்ளமைவுடன் வருகிறது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.29,990 ஆக இருக்கலாம்.
அறிமுகம் எப்போது?
இத்தனை சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த ‘Realme P3 Pro’ இந்தியாவில் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலே கொடுக்கப்பட்ட விலைகள் எதிர்பார்க்கப்பட்ட விலைகள் தான். இன்னும் விலைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. எனவே, அறிமுகம் செய்யப்பட்ட பிறகு விலை மாறுபடவும் வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)