கருடனை விட கவிழ்ந்த விடாமுயற்சி! அஜித் படத்திற்கு இந்த நிலைமையா?

விடாமுயற்சி திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 120 கோடிகள் வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

garudan vs vidaamuyarchi

சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை சந்தித்து கொண்டு வருகிறது. அஜித் படத்திற்கு இந்த நிலைமையா? என்கிற வகையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. வரவேற்பு குறைந்து வருவதால் வசூலும் குறைந்து வருகிறது.

படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்து பல ஊடகங்கள்வெளியிட்ட தகவலின் படி மொத்தமாக படம் உலகம் முழுவதும் 120 கோடிகள் வரை மட்டுமே வசூல் செய்திருந்ததாக தகவல் வெளியிடபட்டிருந்தது. படம் மொத்தமாக 220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் பட்ஜெட்டை தொடும் அளவுக்கு படம் வசூல் செய்யுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த கேள்விக்கு ஏற்றது போல டிக்கெட்களை புக்கிங் செய்யும் BookMyShow-வில் விடாமுயற்சி படம் குறைவாகவே டிக்கெட் புக்கிங் ஆகியுள்ளது. அதன்படி, தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை வெளியான பெரிய பட்ஜெட் படங்களில் முதல் வாரம் (திங்கள்கிழமை) டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டதில் விடாமுயற்சி படம் தான் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

அதன்படி, முதலிடத்தில் அமரன் படம் (206k) இரண்டாவது இடத்தில் கோட் திரைப்படம் ( 190k ), மூன்றாவது இடத்தில மகாராஜா (126k) அதற்கு அடுத்த இடங்களில் அயலான், கேப்டன் மில்லர், ராயன், வேட்டையன், அரண்மனை 4, கருடன், விடாமுயற்சி ஆகிய படங்கள் உள்ளது. இதில் விடாமுயற்சி படத்திற்கு முன்பு இருக்கும் கருடன் படம் வெளியாகி முதல் வாரத்தின் திங்கள்கிழமை (43K) டிக்கெட் புக்கிங் பதிவு செய்யப்பட்டது.

அந்த அளவுக்கு கூட விடாமுயற்சி படத்திற்கு புக்கிங் ஆகவில்லை. அதைவிட குறைவாக (40K) மட்டுமே டிக்கெட் புக்கிங் ஆகியுள்ளது. எனவே, அஜித் படத்திற்கு இந்த நிலைமையா? என சமூக வலைத்தளங்களில் கேள்விகளும் எழும்ப தொடங்கிவிட்டது. இருப்பினும் விடுமுறை நாட்களில் புக்கிங் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்