INDvENG : டேஞ்சரில் சச்சின் சாதனை! முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா 13 ரன்கள் எடுத்தால் வரலாற்று சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

rohit sharma sachin tendulkar

அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக இறுதிப்போட்டி நாளை (பிப்ரவரி 12)-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டியில் விளையாட இந்திய வீரர்களும், இங்கிலாந்து அணி வீரர்களும் தயாராகி வருகிறார்கள்.

மேலும், இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்ற காரணமே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் அதிரடியான ஆட்டம் தான் காரணம். 50 ஓவர்களில் 30 ஓவர்கள் நின்று 90 பந்தில் 7 சிக்ஸர்கள் பறக்கவிட்டு, 12 பவுண்டரிகள் கடந்து 119 ரன்கள் விளாசினார். அதன் மூலம், அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் உள்ளிட்ட சாதனைகளையும் படைத்தார்.

இந்த சூழலில், மூன்றாவது போட்டியிலும் அவர் இப்படி அதிரடியாக விளையாடினார் என்றால் நிச்சயமாக இன்னும் பெரிய வரலாற்று சாதனையை படைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி அவர் அடுத்ததாக மூன்றாவது போட்டியில் படைக்கவுள்ள சாதனை பற்றி பார்ப்போம்.

ஒரு நாள் போட்டிகளில் 11,000 ரன்கள் 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மிகப்பெரிய சாதனை ஒன்றை நிலைநிறுத்த வாய்ப்பு இருக்கிறது. அந்த போட்டியில் அவர் 13 ரன்கள் எடுத்தாலே, அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 11000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். இதன்மூலம், கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வீரர்களான சச்சின் டெண்டுல்கர் (18426) மற்றும் விராட் கோலி (13911) ஆகியோருடன் அந்த பட்டியலில் இணைவார்.

ரோஹித் ஷர்மாவுக்கு முன்பே விராட் கோலி கடந்த 2019ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த உலகக்கோப்பை போட்டியில் 11000 ரன்களை கடந்தவர் என்ற  இந்த சாதனையை பதிவு செய்தார். குறிப்பாக, மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (222) இந்த மைல்கல்லை அடைந்தவர் கோலி தான். இவருக்குப் அடுத்த இடத்தில் தான் இந்த சாதனை பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார்.

இந்த சாதனையை, சச்சின் 2002ல் இங்கிலாந்துக்கு எதிராக தனது 284வது போட்டியில் பதிவு செய்தார்.  இப்போது, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இந்த எலிட் கிளப்பில் இணைவதற்குத் தயாராக இருக்கிறார்.  சச்சின் டெண்டுல்கர் 284வது போட்டியில் தான் இந்த சாதனையை படைத்திருக்கிறார். ஆனால், அதே சமயம் ரோஹித் சர்மா 259 இன்னிங்ஸ் மட்டுமே இதுவரை விளையாடி இருக்கிறார். எனவே, அடுத்ததாக அவர் விளையாடவுள்ளது 260-வது இன்னிங்ஸ் தான். எனவே, அந்த போட்டியில் 13 ரன்கள் ரோஹித் அடித்துவிட்டார் என்றால் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்