Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
இன்று அறுபடை வீடுகளில் நடைபெறும் தைப்பூச திருவிழா முதல் உள்ளூர் உலக அரசியல் நிகழ்வுகள் வரை பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.
![Today Live 11 02 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Today-Live-11-02-2025.webp)
சென்னை : இன்று (பிப்ரவரி 11) தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் முருக பக்தர்கள் லட்சக்கணக்கானோர் தரிசனத்திற்காக குவிந்துள்ளனர். பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.
மதுரை மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி துவங்கி வைத்துள்ளார். நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு காளைகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.
பாரிஸில் நடைபெறும் AI உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் பிரதமர் மோடியை வரவேற்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)