“கடைசியாக ஒரு தடவை..,” பிரமிக்க வைக்கும் ஆக்சன்., டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் பிரமாண்டம்!

டாம் குரூஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் படத்தின் 8வது பாகமான தி பைனல் ரெக்கோனிங் (The final Reckoning)திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

Tom cruise in Mission Impossible The final Reckoning teaser

சென்னை : ஹாலிவுட் சினிமாவில் பிரமாண்ட ஆக்சன் அட்வெஞ்சர் திரில்லர் வகையை சேர்ந்த சினிமா பிரான்ஸிலில் டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு உலகம் முழுக்க பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. 1996ஆம் ஆண்டு வெளியான முதல் பக்கமான மிஷன் இம்பாசிபிள் படத்தின் முதல் பாகத்தோடு இதுவரை 7 பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

தற்போது 8வது பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிஷன் இம்பாசிபிள் The final Reckoning எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ரிலீஸ் இந்த வருடம் மே 23 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இந்தியாவிலும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளதால் ஆங்கிலத்தில் வெளியாகும் அதே நாளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.

62 வயதான இப்பட ஹீரோ டாம் குரூஸ், மிஷன் இம்பாசிபிள் படத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் இதுவரை இல்லாத அளவுக்கு ரிஸ்க் எடுத்து டூப் எதுவும் இல்லாமல் ஸ்டண்ட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.துபாய் புர்ஜ் கலிபா பில்டிங்கில் சண்டை காட்சி முதல் மலைப்பாதையில் பைக்கில் சென்று பாராசூட்டில் பறந்தது வரை உயிரை பணயம் வைத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவ்வாறு பல்வேறு சாகச கதைகளை கொண்டுள்ள மிஷன் இம்பாசிபிள் படத்தின் இறுதி பக்கமாகவே மிஷன் இம்பாசிபிள் The final Reckoning எனும் 8வது திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கான டீசர் நேற்று வெளியானது. இதில் “இறுதியாக ஒரு தடவை” என டாம் குரூஸ் கூற ஆரம்பித்ததில் இருந்து துவங்கி பழைய பக்கத்தின் சில காட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, புதிய பக்கத்திலும் முந்தைய பக்கத்திற்கு சற்றும் குறையாத வண்ணம் ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிறது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்