பழைய பார்முக்கு திரும்பிய ‘ஹிட்மேன்’ ரோஹித்! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்கள்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசிய நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருடைய பேட்டிங் பற்றி பாராட்டி பேசி வருகிறார்கள்.

Captains Power Knock rohit

கட்டாக் : கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடி வந்த காரணத்தால்பழைய பார்முக்கு எப்போது வருவீங்க? பழைய பார்முக்கு எப்போது வருவீங்க? என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழும்ப தொடங்கியது. அந்த கேள்விகளுக்கு வார்த்தைகள் மூலம் பதில் கொடுக்காமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பழைய ஹிட்மேனாக மாறி சதம் விளாசி ரோஹித் தன்னுடைய பேட்டிங் மூலம் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதில் அளித்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற அந்த போட்டியில், ரோஹித் சர்மா 30 ஓவர்கள் நின்று 90 பந்தில் 7 சிக்ஸர்கள் பறக்கவிட்டு, 12 பவுண்டரிகள் கடந்து 119 ரன்கள் விளாசினார். ஒரு வழியாக ரோஹித் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ரசிகர்களை போலவே, முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவருடைய பேட்டிங் பார்த்து மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனையடுத்து, ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தை பாராட்டி பேசும் வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசியிருக்கிறார்கள். அப்படி யாரெல்லாம் அவருடைய பேட்டிங் பற்றி பேசினார்கள் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஆகாஷ் சோப்ரா

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய அவர் ” இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் கூடுதலாக சிறப்பான விஷயம் என்னவென்றால், ரோஹித் சர்மாவின் சதம் தான். அவர் கடந்த சில போட்டிகளாக சரியாக விளையாடவில்லை என்கிற விமர்சனம் இருந்து கொண்டே இருந்தது. அந்த விமர்சனங்களுக்கு அவர் பேட்டிங் மூலம் பதில் கொடுத்து பழைய பார்முக்கு திரும்பியது சிறப்பான விஷயம் .அவர் பார்முக்கு திரும்பியுள்ள காரணத்தால் இனிமேல், 25-30 ஓவர்கள் மைதானத்தில் விளையாடாமல் திரும்பப் போவதில்லை எனவும்” ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

யுவராஜ் சிங்

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” “அவர் திரும்பிவந்துவிட்டார் அதுவும்அதிரடியாக! ஹிட்மேனை நீண்ட நேரம் அமைதியாக வைத்திருக்க முடியாது . அவருடைய பேட்டிங் தான் எல்லாவற்றையும் பேச வைக்கும்” என பதிவிட்டுள்ளார்.

ஜாஸ் பட்லர்

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் போட்டி முடிந்த பிறகு பேசும்போது ” இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் நாங்கள் எங்களால் முடிந்த விஷயங்களை செய்தோம் ஆனால், 350 ரன்களுக்கு கொண்டு செல்வதற்கு ஒரு வீரர் எங்களுக்கு தேவைப்பட்டார். இந்திய அணியில் ரோஹித் சர்மா அதனை மிகவும் சிறப்பாக செய்தார். இந்த போட்டியில் மட்டுமில்லை பல வருடங்களாக அவர் அப்படி தான் விளையாடி வருகிறார். இந்தப் போட்டியின் பாராட்டு முற்றிலும் ரோஹித் சர்மாவையே சேரும்” எனவும் பாராட்டி பேசினார்.

தொட்டா கணேஷ்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தொட்டா கணேஷ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” இந்தியா அசத்தலான தொடரை வெற்றிபெற்றுள்ளது. இந்த நேரத்தில் ரோஹித் சர்மா தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பியுள்ளது வருகின்ற முக்கியமான போட்டிகளில் இந்தியா வெல்வதற்கு ஒரு சாதகமாக அமைந்துள்ளது” என தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 11 02 2025
tvk vijay
donald trump angry
NarendraModi -Thaipoosam
India vs England 3rd ODI
champions trophy 2025 india squad
aadhav arjuna - prashant kishor