அஜித் ரசிகர்களுக்கு அடுத்த ‘ஷாக்’! போர்ச்சுகல்லில் கார் விபத்தில் சிக்கிய AK!
துபாயை தொடர்ந்து போர்ச்சுகல் கார் ரேசிங்கில் பங்கேற்கும் அஜித்குமார், அங்கு பயிற்சியின் போது சிறு விபத்தில் சிக்கினார்.
![Ajithkumar Car Racing in Portugal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Ajithkumar-Car-Racing-in-Portugal.webp)
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு வருகிறார். அவர் அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் கார் பந்தைய அணியை சொந்தமாகக் கொண்டு வழிநடத்தி வருகிறார். இந்த அணி அண்மையில் துபாயில் நடைபெற்ற ரேஸிங்கில் பங்கேற்று குறிப்பிட்ட பிரிவில் 3வது இடம் பிடித்தது.
அப்போதே பயிற்சியின்போது அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இருந்தும், தனது அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இறுதி போட்டியில் கார் ஓட்டுவதில் இருந்து அஜித் விலகினார். அதனை அடுத்து அஜித்குமார் ரேஸிங் அணி பந்தயத்தில் பங்கேற்றது.
துபாய் ரேஸை அடுத்து போர்ச்சுகல்லில் நடைபெறும் ரேசிங்கில் அஜித்குமார் ரேஸிங் அணி கலந்துகொள்ள உள்ளது. இதற்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்த தகவலை அங்குள்ள தனியார் செய்தி நிறுவனத்தில் பேட்டியளித்து இருந்தார். அப்போது பேசுகையில், ” எனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி எனது வாழ்க்கையில் நான் அடுத்து என்ன செய்கிறேன் என்பதை அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நன்றி. ” என தெரிவித்த அவர், “இங்கு பயிற்சி மேற்கொள்ளும் போது கூட சிறு விபத்து ஏற்பட்டது. எனது குழு விரைந்து செயல்பட்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் எனது பயிற்சியை தொடர்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அண்மையில் வெளியான அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அடுத்ததாக துபாய் பயிற்சி போலவே மீண்டும் போர்ச்சுகல்லில் பயிற்சி மேற்கொள்ளும் போதும் அஜித் விபத்தில் சிக்கினார் என்ற செய்தி அவரது ரசிகர்களை ‘ஷாக்’ அடைய வைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025![vijay prashant kishor](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/vijay-prashant-kishor.webp)
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)