ஈரோடு கிழக்கு : திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.., 10 ஆயிரத்தை நெருங்கும் வித்தியாசம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போது வரை திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 11,140 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1,081 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
![Erode By Election Result](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Erode-By-Election-Result.webp)
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி முதல் எண்ணப்பட்டு, முதலில் தபால் வாக்குகள் எனப்பட்டன. அடுத்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த இடைத்தேர்தலில் ஆளும் திமுக வேட்பாளருக்கு எதிராக அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால் திமுக vs நாதக என்ற போட்டியே ஈரோடு களத்தில் நிலவியது. இதனால் ஆளும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு தான் அதிக வெற்றிவாய்ப்பு என்பது கணிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்களும் அதையே பிரதிபலித்து வருகின்றன. தற்போது (காலை 9 மணி) வரையில் எண்ணப்பட்ட வாக்குகளின் படி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 11,797 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 2,056 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வாக்கு வித்தியாசம் 9,741-ஆக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)
ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!
February 8, 2025![V. C. Chandhirakumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/V.-C.-Chandhirakumar.webp)
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)