டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர் முன்னிலை.!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்று பார்க்கலாம்.
![Delhi Election 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Delhi-Election-2025.webp)
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் செயல்முறைக்காக பயிற்சி பெற்ற துணை ஊழியர்கள் உட்பட 5,000 பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும், அதன் பின் 30 நிமிடங்களுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணத் தொடங்கப்படும்.
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 1.55 கோடி தகுதியுள்ள வாக்காளர்களைக் கொண்ட டெல்லியில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 46 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
தொலைக்காட்சி சேனல்கள் நடத்தும் சமீபத்திய கணிப்பின்படி, ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முதற்கட்ட தலைவர்கள் பின்னடைவை சந்தித்த நிலையில், பாஜகவின் முக்கிய தலைவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். அதன்படி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து முதல்வர் அதிஷியும் பின்னடைவை சந்தித்துள்ளார். கல்காஜி தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ரமேஷ் பிதுரி முன்னிலை வகிக்கிறார். அதேபோல், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியாவும் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காலை 8.45 மணி நிலவரப்படி, முன்னிலை நிலவரம்:
பாஜக – 46
ஆம் ஆத்மி – 26
காங்கிரஸ் – 1
குறிப்பு :- இந்திய தேர்தல் ஆணையத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ நிலவரங்களின்படி, டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 6 இடங்களிலும் முன்னிலை வகிக்க, ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது..
லேட்டஸ்ட் செய்திகள்
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)