‘தமிழகத்தில் பதற்றம்’ “பெரியார் சிலை அவமதிப்பு” தயார் நிலையில் காவல்துறை..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தீவுத்திடல் பூங்காவில் மற்றும் அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை மீது காலணிகளை வைத்து அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தின் சிறந்த சிந்தனையாளராகவும், சமூகப்புரட்சியின் வழிகாட்டியாகவும், புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராகவும் , பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராகவும் , மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகவும் செயல்பட்ட தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தந்தை பெரியாரின் 140–வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அந்தந்த பகுதியில் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் ஷூ வீசி அவமரியாதை செய்தனர்.
அதே போல திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தீவுத்திடலில் இருக்கும் பூங்காவில் உள்ள பெரியார் சிலை மீது சமூக விரோதிகள் காலணிகளை வைத்து அவமரியாதை செய்ததுடன் சேதப்படுத்தியுள்ளனர்.இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி , காங்கிரஸ் கட்சினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தந்தை பெரியார் சிலைகள் சேதப்படுத்தி , அவமரியாதை செய்யப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பதற்றமான சுழல் நிலவுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு விநாயகர் சதூர்த்தி கலவரம் , பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அநாகரிக பேச்சு , காவல்துறை தேடுதல் வேட்டை என்று தமிழகம் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் தமிழகம் பதற்றமாக உள்ளது.
DINASUVADU