சீமராஜா எதிர்பார்த்த வசூல் கிடைத்ததா…!!!!
சீமராஜா சிவகார்த்திக்கேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் விடுமுறை தினம் முடிந்து இன்று வார நாட்கள் தொடங்கியுள்ளது, இனி தான் இப்படத்திற்காக ரியல் சோதனை உள்ளது.
சரி அது இருக்கட்டும், கடந்த 4 நாட்களில் சீமராஜா வசூல் எப்படி என்று பார்ப்போம், சென்னையை பொறுத்தவரை ரூ.3 கோடி வசூல் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் இப்படம் ரூ.26 கோடி வரை 4 நாட்களில் வசூல் செய்துள்ளது, ஆனால், ரூ 30 கோடி வரை வசூல் வரும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
இன்று தான் படத்தின் உண்மையான ரிசல்ட் தெரியும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.