இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!
ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது என ஆஸ்ரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த பொது தவித்துக்கொண்டிருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் கில்லுடன் இணைந்து ஒரு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, 30 பந்துகளில் அரை சதம் விளாசி ஒரு நாள் போட்டியா? இல்லை இது டி20 போட்டியா என பார்வையாளர்களை மிரள வைத்துவிட்டார். அதிரடியாக விளையாடினாலும் கூட அவர் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
read more- INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
இருப்பினும் அவருடைய அதிரடி ஆட்டம் தான் அடுத்ததாக களமிறங்கிய சுப்மன் கில்லின் அதிரடியான பேட்டிங்கிற்கு ஒரு ஊக்கமாகவும் அமைந்தது .எனவே, இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி பேசி வருகிறார்கள். அப்படி தான் ஆஸ்ரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவருடைய பேட்டிங் குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் ” கடந்த இரண்டு வருடங்களாக அவர் இந்திய அணியில் இல்லாமல் இருப்பது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. என்ன மாதிரியான ஒரு வீரர் அவர்? உலகக் கோப்பை ஆடியிருந்தால் நிச்சியமாக இன்னும் அருமையாக இருந்திருக்கும். அவருக்கு அந்த இரண்டு காயங்கள் இருந்தன, வெளிப்படையாக அவரது முதுகில் காயம் ஏற்பட்டு அணியை விட்டு வெளியேறினார்.
அந்த காயத்தில் இருந்து மீண்டு இப்போது இப்படி விளையாடியது என்னுடைய இடத்தை நான் தக்க வைத்துக்கொள்ள இப்படி ஆடுகிறேன் என்பது போல இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் அவர் எப்படி விளையாடுகிறாரோ அதே போல தான் ஒரு நாள் தொடரிலும் விளையாடி வருகிறார். அவருடைய பேட்டிங் ஸ்டைலை வைத்து பார்க்கையில் மெதுவான பிட்ச்களுக்கு ஏற்றவாறு விளையாட அவர் சிறந்த வீரர். அவர் மீண்டும் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி” எனவும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.