கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

கந்தூரி விழாவை முன்னிட்டு நாளை விடுமுறை என காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Karaikal holiday

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி அரசு மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியீட்டு அறிவித்துள்ளது.

கந்தூரி விழா என்றால் என்ன? 

காரைக்கால் கந்தூரி விழா என்பது தமிழ்நாட்டின் காரைக்கால் பகுதியில் உள்ள நகர்துணி தர்காவில் (Nagore Dargah) நடைபெறும் முக்கியமான இஸ்லாமிய மத விழாக்களில் ஒன்றாகும். இது நகூர் ஆண்டவர் ஸந்தநூல் அப்துல் காதிர் ஷா ஓலியாவின் நினைவாக ஆண்டுதோறும் மிகுந்த பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது.

விழா வருடந்தோறும் இஸ்லாமிய காலண்டர் அடிப்படையில் நடத்தப்படுகிறது. பொதுவாக, 30 நாள்கள் வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. முக்கிய நிகழ்வாக சந்தனம் பறிப்பு, கொடி ஏற்றம், மௌலீது பாடல்கள், சந்தனம் அணிவித்தல், தர்கா சந்தனக் கட்டை ஊர்வலம், நலத்திட்ட உதவிகள் போன்றவை இடம்பெறும்.

விடுமுறை

எனவே, இந்த விழா நடைபெறும்போது ஆண்டு தோறும் அந்த நாளில் விடுமுறை அறிவிக்கப்படும். அப்படி தான் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு மாவட்ட நிர்வாகம்  வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழாவை முன்னிட்டு வருகின்ற 08.02.2025 (சனிக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்/கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதற்கு பதிலாக வருகின்ற 15.02.2025 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்.  மேலும், அரசு தேர்வுகள் மற்றும் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்