மகா கும்பமேளா – சங்கராச்சாரியார் மார்க் பகுதியில் பயங்கர தீ!
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
![kumbh mela fire accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/kumbh-mela-fire-accident.webp)
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18 பகுதியில் VVIPக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் முழுவதும் தீக்கிரையாகின. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், பக்தர்கள் யாரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக பக்தர்கள் இருந்த கூடாரத்தில் தீ பற்றிருக்கலாம் என்று முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, திடீரென தீ விபத்து ஏற்பட்டதும் சிறிது நேரத்திலேயே கூடாரம் முழுவதும் தீ பற்றி ஏறிய தொடங்கியது.
பயங்கர தீ விபத்து ஏற்பட்ட பிறகு, மக்கள் தங்கள் கூடாரங்களை விட்டு ஓடத் தொடங்கினர். பயங்கர தீ விபத்து ஏற்பட்ட பிறகு, மக்கள் தங்கள் கூடாரங்களை விட்டு ஓடத் தொடங்கினர். இருப்பினும், 5-10 நிமிடங்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன. தீயணைப்பு படையினர் விரைவாக செயல்பட்டு, பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு தீயைக் கட்டுப்படுத்தினர்.
இதனால், தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கும்பமேளா நிர்வாகத்தின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனவரி 30 ஆம் தேதி, மகா கும்பமேளாவின் செக்டார்-22 இல் உள்ள பல பந்தல்கள் தீப்பிடித்து எரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்தில் 15 கூடாரங்கள் எரிந்து சாம்பலாயின. அதற்கு முன்னதாக, ஜனவரி 19 அன்று, மகா கும்பமேளாவின் 19வது பிரிவில் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டது, அப்போது ஒரு முகாமில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் தீப்பிடித்தது.
இந்த சம்பவத்தில் சுமார் 18 முகாம்கள் எரிந்து சாம்பலாயின. இருப்பினும், இரண்டு முறையும் தீயணைப்புப் படை வீரர்கள் உடனடியாக தீயைக் கட்டுப்படுத்தினர், இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.