INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியள்ளது.
![ShubmanGill](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ShubmanGill-.webp)
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் அதிரடியாக பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய அணியை பந்துவீச அழைத்து.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், தொடக்கத்திலே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஷ்வால் தங்களுடைய விக்கெட்களை இழந்தனர். முதலில் ஜெய்ஷ்வால் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்ததாக ரோஹித் 2 ரன்கள் என சொற்ப ரன்களில் இருவரும் ஆட்டமிழந்தனர்.
ஆரம்பமே நமக்கு அதிரடி தான் என இங்கிலாந்து அணி கொஞ்சம் உற்சாகம் அடைந்த நிலையில், அடுத்ததாக களத்திற்கு வந்த சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பான சம்பவங்களை செய்தனர். முதல் சம்பவமாக ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸர் பவுண்டரி என தெறிக்கவிட்டு 33 பந்துகளில் அரை சதத்தை பதிவு செய்தார்.
மற்றோரு பக்கம் சுப்மன் கில்லும் அதிரடி கலந்த நிதான ஆட்டத்தை வெளுப்படுத்திக்கொண்டு இருந்தார். எனவே, போட்டியை ரசித்த பார்வையாளர்கள் இது ஒரு நாள் போட்டி தானே..டி20 போட்டி மாதிரி இருக்கிறது என்பது போல இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டத்தை பார்த்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர். பிறகு நாங்களும் கம்பேக் கொடுப்போம் என்கிற நோக்கத்தில் இங்கிலாந்து ஷ்ரேயாஸ் ஐயரை 59 ரன்களில் தூக்கியது.
இதனையடுத்து, அவர் ஆட்டமிழந்தால் என்ன நான் இருக்கிறேன் என்பது போல அவர் விட்டு சென்ற அதே அதிரடியை சுப்மன் கில் காண்பித்தார். ஷ்ரேயாஸ் ஐயரை தொடர்ந்து சுப்மன் கில்லும் 60 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். அரை சதம் பூர்த்தி செய்ததை தொடர்ந்தும் அணியை வெற்றிபெற செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடினார். அவருக்கு மாற்றொரு முனையில் விளையாடிய அக்சர் படேலும் அதிரடியாக விளையாடி இருவருடைய பார்ட்னர்ஷிப் அமோகமாக அமைந்தது. பிறகு வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்த போது அக்சர் படேல் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவர்களுடைய அதிரடி ஆட்டம் காரணமாக இந்திய அணி 38.4 ஓவர்கள் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதல் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 87 , ஷ்ரேயாஸ் ஐயர் 59, அக்சர் படேல் 52 ரன்கள் எடுத்தனர். பேட்டிங்கில் இந்திய அணி மிரட்டியது போல இங்கிலாந்து அணியில் சில பந்துவீச்சாளர்களால் மட்டுமே விக்கெட்கள் எடுக்க முடிந்தது. குறிப்பாக, ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 , சாகிப் மஹ்மூத் 2 , அடில் ரஷீத் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.