INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 67 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Jos Buttler odi

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இப்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்கத்தில் பிலிப் சால்ட் 43, பென் டக்கெட் 32 என அதிரடியான ரன்களை எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து  3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள்  என்று திணறிக் கொண்டிருந்தபோது களத்திற்கு வந்த கேப்டன் ஜாஸ் பட்லர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றே கூறலாம்.

நிதானம் கலந்த அதிரடியில் விளையாடிய அவர் 67 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் குவித்து அணியை ஒரு திடமான நிலைக்கு கொண்டு வந்தார். எனவே, அவர் அட்டமிழந்தாலும் கூட ரசிகர்கள் அவருடைய பேட்டிங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் சதம் விளாசியதன் மூலம்  இந்தியாவில் தனது முதல் ஒருநாள் அரைசதத்தை இன்றுஅடித்துள்ளார். இதுவரை இந்திய மண்ணில் ஒரு நாள் போட்டிகளில் அரை சதம் அவர் அடிக்காமல் இருந்த நிலையில், தற்போது இந்த சாதனையையும் அசத்தலாக படைத்துள்ளார்.

ஏற்கனவே, இந்தியாவுக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் மொத்தமாக 147 ரன்கள் ஜோஸ் பட்லர் எடுத்திருந்தார். இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

அதைப்போல, இந்தியாவுக்கு எதிரான (இந்த 5 போட்டிகள் கொண்ட டி20)  தொடரில் மொத்தம் 6 சிக்ஸர்கள் விளாசி இருந்தார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 350 சிக்சர்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்து இருந்தார். இதனையடுத்து, இப்போது இந்திய மண்ணில் அவர் தனது முதல் அரை அரைசதத்தை பதிவு செய்துள்ள காரணத்தால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்