ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!
ஹர்திக் பாண்டியாவுக்கு இப்போது காயமடைந்தால் என்ன நடக்கும் என்று இப்போது நான் யோசிக்க மாட்டேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
![rohit sharma hardik pandya](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-hardik-pandya.webp)
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி சார்பில், கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு அவரும் பதில் அளித்தார். குறிப்பாக, ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஹர்திக் பாண்டிய உடற்தகுதி எப்படி இருக்கிறது? ஏற்கனவே அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது எனவே, திடீரென அவருக்கு காயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்பது போல கேள்வியை எழுப்பினார்.
எப்போதும் எதிர்மறையாக ஏன் யோசிக்கவேண்டும் என்பது போல முக பாவனையை மாற்றிக்கொண்டு கோபத்துடன் பேசிய ரோஹித் சர்மா “பொதுவாகவே நான் எதிர்மறையான இப்படியான விஷயங்களை பற்றி சிந்திப்பது இல்லை. நாம் ஏன் இப்படி எதிர்மறையாக சிந்திக்கவேண்டும்? அவர் காயமடைவார் இது நடக்கும் அது நடக்கும் என யோசிப்பதை நிறுத்தவேண்டும்.
இதற்கு தேர்வாளர்கள் மற்றும் எங்களுடைய மனதில் சில விஷயங்க இருக்கிறது. அதனை வெளியில் சொல்ல முடியாது. அவர் காயமடைந்த போதிலும் கூட நாங்கள் உலககோப்பை விளையாடினோம். அவர் 3-வது போட்டியிலோ 4-வது போட்டியிலோ தான் காயமடைந்தார். அதன் பிறகு, நாங்கள் முழு போட்டியிலும் விளையாடினோம். இறுதிப் போட்டியில் நாங்கள் தோற்றாலும், இறுதிப் போட்டி வரை நாங்கள் முடிந்த அளவுக்கு சிறப்பாக தான் விளையாடினோம்.
எனவே, அவர் காயமடைந்தால் என்ன நடக்கும் என்று இப்போது நான் யோசிக்க மாட்டேன். இது நடந்தால் என்ன நடக்கும், அது நடந்தால் என்ன நடக்கும்? என்று பேசுவதை நிறுத்தினாலே நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன். எதுவும் நடக்காது,அவர் சிறப்பாக விளையாடுவார்” எனவும் ரோஹித் சர்மா தெரிவித்தார்,
செய்தியாளர் கேட்க கேள்விக்கு என்ன காரணம்?
கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாடி கொண்டிருந்தபோது அவருக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, அவர் பெரிதாக எந்த ஒரு நாள் தொடரிலும் விளையாடவில்லை. எனவே, நீண்ட மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஒரு நாள் தொடரில் அவர் மீண்டும் களமிறங்கியுள்ள காரணத்தால் அவருடைய உடற்தகுதி எப்படி இருக்கிறது என்பதற்காக இந்த கேள்வியை பத்திரிகையாளர் எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!
February 6, 2025![Rohit Sharma](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-Sharma-.webp)
INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!
February 6, 2025![ind vs eng first innings](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-first-innings.webp)
திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!
February 6, 2025![TVK Leader Vijay - TN CM MK Stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TVK-Leader-Vijay-TN-CM-MK-Stalin.webp)