INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு! பந்துவீச தயாராகும் இந்தியா!
நாக்பூரில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்ற ஆத்திரேலியா அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்னும் சில வாரங்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ளதால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கு ஒரு முன்னோட்டமாக தங்கள் அணி பலத்தை சுயபரிசோதனை செய்து கொள்ளும் தொடராகவும் பார்க்கப்படுகிறது.
இதில் ஆஸ்திரேலியா அணி சார்பாக கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில், பென் டக்கெட், பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி சார்பில், கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் இடம்பெறுள்ளனர்.