சாம்பியன்ஸ் டிராபி… டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நுழைய முடியாது.! ரசிகர்ளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு…

சாம்பியன்ஸ் டிராபிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கான முக்கியமான விவரங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Champions Trophy Digital Tickets

பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஜனவரி 28ம் தேதி விற்பனை செய்யப்பட்டது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன.

துபாய் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் குளோபல் ஸ்போர்ட்ஸ் டிராவல் அல்லது விர்ஜின் மெகாஸ்டோர் வழியாக ஆன்லைனில் விற்கப்படுகின்றன. கடந்த 3ம் தேதி மாலை 4 மணி முதல் விற்பனைக்கு வந்த உடனே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது.

ஐசிசி தரவரிசை அட்டவணையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகளை 2ஆக பிரித்து போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், குரூப் ஏ பிரில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் விளையாட உள்ளன.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் மைதான நுழைவுக்கான டிக்கெட்டுகளை கட்டாயமாக வசூலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். இதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), ICC உடன் இணைந்து, டிஜிட்டல் முறையில் வாங்கிய நேரடி டிக்கெட்டுகளை சேகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரசிகர்கள் பாகிஸ்தானில் உள்ள 13 நகரங்களில் அமைந்துள்ள 37 நியமிக்கப்பட்ட TCS எக்ஸ்பிரஸ் மையங்களில் இருந்து தங்கள் டிக்கெட்டுகளைப் பெறலாம். தங்கள் டிக்கெட்டுகளைப் பெற, வாங்குபவரின் அசல் CNIC (தேசிய அடையாள அட்டை)யை சரிபார்ப்புக்காக சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும்அடையாள அட்டைகளுக்கு ஐடிகளுக்கு நான்கு டிக்கெட்டுகள் வரை கிடைக்குமாம். குறிப்பாக, டிஜிட்டல் டிக்கெட்டுகள் மைதானங்களில் ஏற்றுக்கொள்ளப்படாது, மேலும் கையில் வைத்திருந்தால் மட்டுமே மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்