‘சாம்பியன்ஸ் டிராபியில் நான் இல்லை’ ஸ்டோனிஸ் திடீர் ஓய்வு! ஆஸ்திரேலியாவுக்கு மேலும் சிக்கல்?

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Marcus Stoinis

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35 வயதான இவர் தற்போது சர்வ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெருவதாக திடீரென அறிவித்துள்ளார். இது ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. அதில் முக்கிய வீரராக மார்கஸ் ஸ்டோனிஸ் பெயரும் இடம்பெற்று இருந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்னும் உடல் தகுதி பெறாத காரணத்தால் அவரால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் களமிறங்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்படியான சூழலில் அனுபவம் வாய்ந்த ஸ்டோனிஸின் ஓய்வு அந்த அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

இனி தான் முழுக்க முழுக்க டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2015-ல் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆஸ்திரேலியா அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். 35வயதான ஸ்டோனிஸ் இதுவரை 71 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் 2017-ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளாசிய 146 ரன்கள் உட்பட மொத்தமாக 1,495 ரன்கள் எடுத்துள்ளார்.  ஒருநாள் போட்டிகளில் இதுவரை 48 விக்கெட்களை ஸ்டோனிஸ் வீழ்த்தியுள்ளார். இறுதியாக 2023 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை வென்று கோப்பையை வெல்லும் ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரராக ஸ்டோனிஸ் இடம் பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஓய்வு குறித்து ஸ்டோனிஸ் கூறுகையில், ” ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவது ஒரு நம்பமுடியாத பயணமாக இருந்துள்ளது. மேலும், நான் ஆஸ்திரேலியா அணி ஜெர்சியை அணிந்து விளையாடிய ஒவ்வொரு தருணத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது நாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் எப்போதும் முதன்மையனனவாக இருப்பேன்.

இது எளிதான முடிவு அல்ல. ஆனால், ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் முழுமையாக கவனம் செலுத்த இதுவே எனக்கு சரியான நேரம் என்று நான் நம்புகிறேன். நான் சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானில் உள்ளவர்களை உற்சாகப்படுத்துவேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்