விடிய விடிய கொண்டாட்டம்… உலகம் முழுவதும் வெளியானது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.!

2 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் படம் வெளியானதால் 'விடாமுயற்சி' ரிலீசாகியுள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Vidamuyarchi

சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழகத்தில் காலை 9 மணி அளவில் இப்படம் வெளியானது. துணிவு படத்திற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து இப்படம் வெளியானதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடினர். இன்று வெளியான இப்படத்திற்கு நேற்றிரவு முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கினர்.

 

நீண்டகால காத்திருப்புக்கு பின், இப்படம் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் பண்டிகை மோடுக்கு சென்று வைப் செய்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் ‘விடாமுயற்சி’ வெளியாகும் ஒரு தியேட்டர் வாசலில் வாணவேடிக்கை பட்டாசுகளை வைத்து கொளுத்தி கொண்டாடினர்.

 

தமிழ்நாட்ற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடையாது என்றாலும், இன்றும், நாளை மறுநாளும் படத்திற்கு காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவில் இப்படம் அதிகாலையில் வெளியாகியது.

ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு, படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை டென்ஷனும், சுவாரசியமும் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளதாகவும், இதுவரை வெளியான அஜித் படங்களிலேயே இது மிகவும் வித்தியாசமானது எனவும் சொல்கிறார்கள்.

ரசிகர்களின் விமர்சனம்

கேரளா மாநிலத்தில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் FDFS இன்று அதிகாலை வெளியான நிலையில், படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மகிழ்திருமேனியின் வழக்கமான ஃபார்முலாவுடன் மாஸும், ரொமான்ஸும் கலந்து விஷுவல் ட்ரீட்டாக படம் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும், அஜித்தின் லுக்கும், த்ரிஷாவின் அழகும் படத்துக்கு ப்ளஸ் பாயிண்ட் எனவும் அவர்கள் சொல்கிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

VidaaMuyarachi - mk stalin
lyca productions vidaamuyarchi
Virat Kohli
Champions Trophy Digital Tickets
IND VS ENG 1ST ODI TOSS
Vidamuyarchi
Marcus Stoinis