காத்திருந்து..காத்திருந்து! ‘விடாமுயற்சி’ பற்றி வாயை திறக்காத அனிருத்! கதறும் ரசிகர்கள்…
விடாமுயற்சி படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், வழக்கமாக விமர்சனங்கள் கொடுக்கும் இசையமைப்பாளர் அனிருத் இன்னும் எதுவும் பதிவிடாமல் இருப்பதால் ரசிகர்கள் சோகத்துடன் காத்திருக்கிறார்கள்.

சென்னை : இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டு படம் வெளியாகும் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் முன்பு படம் எப்படி இருந்தது என்பது பற்றி தன்னுடைய விமர்சனத்தை கூறுவார். அவருடைய விமர்சனங்கள் படியும் படங்களும் ஹிட் ஆகி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் லியோ, ஜெயிலர் ஆகிய படங்களுக்கு விமர்சனம் கொடுத்து படம் மிகவும் அருமையாக வந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்தது போலவே இரண்டு படங்களும் மிக்பெரிய ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து இந்தியன் 2 எனும் பிரமாண்ட படத்திற்கு இசையமைத்தபோதிலும் படம் பற்றி அவர் எந்த விமர்சனமும் கூறவில்லை. அதைப்போலவே படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. எனவே, அனிருத் ஒரு படத்திற்கு விமர்சனம் கொடுத்தாலே போதும் அந்த படம் ஹிட் ஆகிவிடுகிறது என ரசிகர்கள் அவருடைய விமர்சனத்திற்காக காத்திருக்கிறார்கள்.
அப்படி தான் அவர் அடுத்ததாக இசையமைத்திருக்கும் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு இன்னும் விமர்சனம் கொடுக்காமல் இருந்து வருகிறார். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இருப்பினும் அவர் இன்னும் விமர்சனம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால் காத்திருந்து..காத்திருந்து காலங்கள் போனதடி என்ற பாடல் வரிகளை அஜித் ரசிகர்கள் வெளியீட்டு வருகிறார்கள்.
அனிருத் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனம் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனியிடம் ” இந்த படம் பட்டாசு போல தெரியாக இருக்கிறது எனவும், கண்டிப்பாக இந்த படம் பெரிய வெற்றியை பெறும் ” எனவும் தெரிவித்திருந்தார். இந்த தகவலை இயக்குநர் மகிழ் திருமேனியே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இருப்பினும், படம் சம்பந்த பட்டவர்களிடம் அவர் தெரிவித்தாலும் இன்னும் சமூக வலைதள பக்கங்களில் தெரிவிக்கவில்லை என்பதால் அவருடைய விமர்சனத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நாளை படம் வெளியாகவுள்ள காரணத்தால் இன்று இரவு அவர் விமர்சனம் கூற அதிக வாய்ப்புள் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.